விஜய் ஹசாரே டிராபி:குரூப் பிரிவு கடைசி ஆட்டத்தில் தமிழகம் வெற்றி

விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டியில் குரூப் சி பிரிவில் ராஜஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் தமிழகம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டியில் குரூப் சி பிரிவில் ராஜஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் தமிழகம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற தமிழகம் பந்துவீசத் தீர்மானித்தது.
இதையடுத்து, முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 38.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் சேத்தன் பிஸ்ட் 51 பந்துகளில் 36 ரன்களும், அர்ஜித் குப்தா 44 பந்துகளில் 27 ரன்களும் எடுத்தனர்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இவ்வாறு 38.2 ஓவர்களில் அந்த அணி 141 ரன்கள் எடுத்தது.
தமிழகம் சார்பில் ரவிஸ்ரீநிவாசன் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜெகதீசன் கௌசிக், அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ரஹில் ஷா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிமையான இலக்குடன் களம் இறங்கிய தமிழகம் 23.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமிழகம் சார்பில் கேப்டன் பாபா அபராஜித் 59 ரன்களில் 55 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜெகதீசன் 39 ரன்களும், கங்கா ஸ்ரீதர் ராஜு 28 ரன்களும், கௌசிக் காந்தி 3 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பாலசந்தர் அஸ்வின் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
காலிறுதிக்கு ஆந்திரம், மும்பை தகுதி: சென்னையில் புதன்கிழமை குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள மும்பை-ஆந்திரம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில் 29 ரன்கள் வித்தியாசத்தில் ஆந்திரம் வெற்றி பெற்றது.
குரூப் சி பிரிவில் 24 புள்ளிகளுடன் ஆந்திரம் முதலிடத்திலும், 16 புள்ளிகளுடன் மும்பை 2-ஆவது இடத்தையும் பிடித்தன. இந்த அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன. குரூப் சி பிரிவில், 8 புள்ளிகளுடன் தமிழகம் 5-ஆவது இடத்தைப் பிடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com