முத்தரப்பு டி20: நியூஸி.யை வீழ்த்தியது இங்கிலாந்து

முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
ஹாமில்டன் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய நியூஸிலாந்து 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 192 ரன்களில் வீழ்ந்தது.
இங்கிலாந்தில் கேப்டன் இயான் மோர்கன் 80, கிறிஸ் ஜோர்டான் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூஸிலாந்தின் டிரென்ட் போல்ட் 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.
பின்னர் ஆடிய நியூஸிலாந்தில் மார்டின் கப்டில் 62 ரன்கள் அடித்தார். மார்க் சாப்மேன் 37, கிராண்ட்ஹோம் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாதின் டாம் கரன் உள்ளிட்ட நால்வர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
மன்ரோ சாதனை: இதனிடையே, நியூஸிலாந்தின் காலின் மன்ரோ விரைவான அரைசதம் (18 பந்துகளில் 2 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்) அடித்த 6-ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com