ரோட்டர்டாம் ஓபன்: ஃபெடரர் சாம்பியன்

நெதர்லாந்தில் நடைபெற்ற ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் சாம்பியன் ஆனார். இது அவரது டென்னிஸ் வாழ்வில் 97-ஆவது பட்டமாகும்.

நெதர்லாந்தில் நடைபெற்ற ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் சாம்பியன் ஆனார். இது அவரது டென்னிஸ் வாழ்வில் 97-ஆவது பட்டமாகும்.
உலகின் முதல் நிலை வீரரான ஃபெடரர் இறுதி ஆட்டத்தில், போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருந்த பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். டிமிட்ரோவை இத்துடன் 7 முறை சந்தித்துள்ள ஃபெடரர், 7-ஆவது வெற்றியை பதிவு செய்தார்.
வெற்றிக்குப் பிறகு பேசிய ஃபெடரர் கூறுகையில், "இப்போட்டியில் அரையிறுதி வரை முன்னேறவே இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com