அஸ்வின்-கிப்ஸ் சுட்டுரையில் வாக்குவாதம்

இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், தென் ஆப்பிரிக்க முன்னாள் பேட்ஸ்மேன் ஹெர்ஷெல் கிப்ஸ் ஆகியோர் சுட்டுரையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் சமாதானமாகினர்.

இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், தென் ஆப்பிரிக்க முன்னாள் பேட்ஸ்மேன் ஹெர்ஷெல் கிப்ஸ் ஆகியோர் சுட்டுரையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் சமாதானமாகினர்.
ஒரு நிறுவனத்தின் ஷூவை பிரபலப்படுத்தும் விதமாக அஸ்வின் தனது சுட்டுரையில் "வேகமாக ஓடுவதற்கு எளிதாக இருக்கும் அவற்றை அணிய காத்திருக்கிறேன்' என்று பதிவிட்டார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நடப்பு கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணியில் அஸ்வின் இடம்பெறவில்லை. அதை மறைமுகமாகக் குறிப்பிட்ட கிப்ஸ், அஸ்வினை குறிப்பிட்டு தனது பதில் பதிவில், "இப்போது நீங்கள் இன்னும் சற்று வேகமாக ஓட இயலும் என நம்புகிறேன் அஸ்வின்' என்று கூறியிருந்தார்.
அதற்கு பதிலடியாக பதிவிட்ட அஸ்வின், கிப்ஸ் சூதாட்டத்தில் குற்றம்சாட்டப்பட்ட விவகாரத்தை குறிப்பிட்டு, "உங்கள் அளவு வேகமாக ஓட நான் ஆசீர்வதிக்கப்படவில்லை. எனினும், எனக்கு வாழ்வளிக்கும் கிரிக்கெட் விளையாட்டில் சூதாட்டத்தில் ஈடுபடாத மனதை ஆண்டன் எனக்கு வழங்கியுள்ளார்' என்று பதிவிட்டார். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கிப்ஸ் கடந்த 2001-இல் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
அதற்கு கிப்ஸ், தான் நகைச்சுவையாக கூறியதாக குறிப்பிட, தானும் நகைச்சுவையாகவே பதிலளித்ததாக பதிவிட்ட அஸ்வின், அதுதொடர்பாக பின்னர் விவாதிக்கலாம் என்று வாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com