பாண்டியா அதிர்ஷ்டவசமாக ஆல்ரவுண்டராகப் பார்க்கப் படுகிறார்: முன்னாள் வீரர் விமரிசனம்!

முதல் தர கிரிக்கெட்டில் அவ்வளவாக ரன்கள் எடுக்காமலேயே சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஆட ஆரம்பித்து...
பாண்டியா அதிர்ஷ்டவசமாக ஆல்ரவுண்டராகப் பார்க்கப் படுகிறார்: முன்னாள் வீரர் விமரிசனம்!

தென் ஆப்பிரிக்கச் சுற்றுப்பயணம் ஹார்திக் பாண்டியாவுக்குச் சாதகமாக அமையவில்லை. 

டெஸ்ட் தொடரில் பாண்டியா 119 ரன்கள் எடுத்தார். ஒருநாள் தொடரில் 26 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது. முதல் டெஸ்டில் 93 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு பாண்டியாவில் பேட்டிங்கில் ரன்கள் எடுக்கமுடியவில்லை. 

இதை முன்வைத்து பாண்டியாவை விமரிசனம் செய்துள்ளார் முன்னாள் வீரர் ரோஜர் பின்னி. ஓர் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

பாண்டியா அதிர்ஷ்டவசமாக ஆல்ரவுண்டராகப் பார்க்கப்படுகிறார். அவர் பேட்டிங்கில் அணிக்குப் பங்களிப்பதில்லை. ஓரளவு பந்துவீசுகிறார். அதனால்தான் அவரால் அணியில் இடம்பிடிக்க முடிகிறது. 

ஒரு பேட்ஸ்மேனாக கபில்தேவுடன் ஒப்பிடமுடியாது. முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஏராளமான சதங்கள் எடுத்த பிறகே இந்திய அணிக்குள் நுழைந்தார் கபில் தேவ். ஆனால் முதல் தர கிரிக்கெட்டில் அவ்வளவாக ரன்கள் எடுக்காமலேயே சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஆட ஆரம்பித்துவிட்டார் பாண்டியா. டி20 போட்டியில் விளையாடுவதை வைத்து டெஸ்ட் அணிக்குத் தேர்வாகியுள்ளார். 

பரோடா அணிக்காக முன்வரிசையில் விளையாடி ரன்கள் எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் அவரால் டெஸ்ட் அணியில் நீடிப்பது சிரமம். 

பாண்டியா முதல் பந்திலிருந்தே சிக்ஸ் எடுக்க முயல்கிறார். இது சாத்தியமேயில்லை. நீடித்து விளையாட அவர் முயற்சி செய்வதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com