தொடர்ச்சியான சாரல் பந்துவீச்சை பாதித்தது

செஞ்சுரியன் டி20 ஆட்டத்தில் இந்தியா பந்துவீசும்போது இருந்த தொடர்ச்சியான மழைச் சாரல், பெளலர்களுக்கு பாதகமாக அமைந்ததாக இந்திய கேப்டன் விராட் கோலி கூறினார்.
தொடர்ச்சியான சாரல் பந்துவீச்சை பாதித்தது

செஞ்சுரியன் டி20 ஆட்டத்தில் இந்தியா பந்துவீசும்போது இருந்த தொடர்ச்சியான மழைச் சாரல், பெளலர்களுக்கு பாதகமாக அமைந்ததாக இந்திய கேப்டன் விராட் கோலி கூறினார்.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-ஆவது டி20 ஆட்டம் செஞ்சுரியனில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுக்க, அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்து வென்றது.
இந்நிலையில், செஞ்சுரியன் ஆட்டம் குறித்து இந்திய கேப்டன் கோலி கூறியதாவது:
இந்திய இன்னிங்ஸின்போது தொடக்க விக்கெட்டுகள் விரைவாகச் சரிந்ததால், ஸ்கோர் 175-இல் நிற்கும் என்று கணித்திருந்தோம். ஆனால், மிடில் ஆர்டரில் மணீஷ் பாண்டே-ரெய்னா ஜோடி சற்று நிலைக்க, பின்னர் தோனி-பாண்டே இணை ஸ்கோரை 190-க்கு அருகே கொண்டு சென்றது.
இந்த ஸ்கோரை கொண்டு வெற்றி பெற முடியும் என்று நினைத்திருந்தேன். ஆனால், தென் ஆப்பிரிக்க இன்னிங்ஸின்போது தொடர்ச்சியாக இருந்த மழைச் சாரலானது இந்திய பந்துவீச்சாளர்களுக்கு பாதகமாக மாறியது.
12-ஆவது ஓவர் வரையில் எல்லாம் சரியாக இருந்தது. பின்னர், மழைச் சாரல் காரணமாக ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமானது. சாரலால் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு பந்தில் பிடிப்பு ஏற்படாமல் போனது. ஆனால், ஆட்டத்தை பாதியில் நிறுத்த முடியாது. உண்மையில் அந்த சூழலில் விளையாடுவதில் எந்தப் பிரச்னையும் இருக்கவில்லை.
மறுபுறம், தென் ஆப்பிரிக்க அணியில் கிளாசென் மற்றும் டுமினி சிறப்பாக பேட்டிங் செய்தனர். ஒரு பார்வையாளனாக பார்க்கும்போது அவர்கள் ஆட்டம் கவனம் ஈர்த்தது. தூரம் குறைவான பவுண்டரி லைன்களை கணித்து அதை அருமையாக பயன்படுத்தினர்.
அவர்கள் சற்று ஆக்ரோஷமாக ஆட விரும்பினோம். அவர்களும் அதைச் செய்தார்கள். அவர்கள் இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள் என்று கோலி கூறினார்.
இத்தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா வென்றிருந்த நிலையில், 2-ஆவது ஆட்டத்தை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியுள்ளதால் 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடர் தற்போது சமநிலையில் உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com