விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட்: அரையிறுதியில் ஆந்திரம், செளராஷ்டிரம்

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆந்திர பிரதேசம், செளராஷ்டிரம் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆந்திர பிரதேசம், செளராஷ்டிரம் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
முன்னதாக 4-ஆவது காலிறுதியில் ஆந்திரம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தில்லியை வென்றது. முதலில் ஆடிய தில்லி 32.1 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய ஆந்திரம் 28.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்து வென்றது.
முன்னதாக டாஸ் வென்ற ஆந்திரம் பந்துவீச, பேட் செய்த தில்லியில் ரிஷப் பந்த் அதிகபட்சமாக 38 ரன்கள் எடுத்தார். ஆந்திர தரப்பில் சிவ குமார் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.
பின்னர் ஆடிய ஆந்திர அணியில் அஸ்வின் ஹெப்பார் அதிகபட்சமாக 38 ரன்கள் எடுத்தார். சுமந்த் 25, ரவி தேஜா 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்தினர். தில்லி தரப்பில் இஷாந்த், சைனி, நெகி, ராணா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
செளராஷ்டிரம் வெற்றி: 3-ஆவது காலிறுதியில் செளராஷ்டிரம் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பரோடாவை வீழ்த்தியது. இதில் முதலில் பேட் செய்த பரோடா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் அடித்தது. பின்னர் ஆடிய செளராஷ்டிரம் 48.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்து வென்றது.
முன்னதாக, டாஸ் வென்ற செளராஷ்டிரம் முதலில் பந்துவீசியது. பேட் செய்த பரோடா அணியில் சோயெப் டாய் அதிகபட்சமாக 72, லுக்மான் மேரிவாலா 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். செளராஷ்டிர தரப்பில் சிரக் ஜானி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய செளராஷ்டிர அணியில் அவி பாரட் அதிகபட்சமாக 82 ரன்கள் எடுத்தார். அர்பித் வசவதா 45, ஷெளரியா சனந்தியா 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்தினர். பரோடா தரப்பில் அதித் சேத் 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com