கிரிக்கெட்: வரலாறு படைத்தது இந்திய மகளிர் அணி

தென் ஆப்பிரிக்காவில் இருவேறு முறைகளிலான கிரிக்கெட் போட்டிகளில் (ஒருநாள், டி20) தொடரை வென்று சாதனை படைத்த முதல் அணி என்ற பெருமையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பெற்றது.
கிரிக்கெட்: வரலாறு படைத்தது இந்திய மகளிர் அணி

தென் ஆப்பிரிக்காவில் இருவேறு முறைகளிலான கிரிக்கெட் போட்டிகளில் (ஒருநாள், டி20) தொடரை வென்று சாதனை படைத்த முதல் அணி என்ற பெருமையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பெற்றது.
 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியுடன் மோத அந்நாட்டுக்குச் சென்றிருந்தது இந்திய மகளிர் அணி. இதில் ஒருநாள் தொடரை 2-1என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா, டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது.
 முன்னதாக, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக சனிக்கிழமை நடைபெற்ற கடைசி டி20 ஆட்டத்தில் இந்தியா 54 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சுற்றுப் பயணத்தை நிறைவு செய்தது. கேப் டவுனில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 18 ஓவர்களில் 112 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆட்டநாயகி மற்றும் தொடர்நாயகி விருதை இந்தியாவின் மிதாலி ராஜ் வென்றார்.
 இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச தீர்மானித்தது. பேட் செய்த இந்திய அணியில் மிதாலி ராஜ் 62, ஸ்மிருதி மந்தனா 13, ஜெமிமா ரோட்ரிகஸ் 44, வேதா கிருஷ்ணமூர்த்தி 8 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். இறுதியில் கேப்டன் ஹர்மன்பிரீத் கெüர் 27 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்பிரிக்காவின் மாரிஸானே காப், அயபோங்கா, ஷப்னிம் இஸ்மாயில் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
 பின்னர் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் மாரிஸானே காப் மட்டும் அதிகபட்சமாக 27 ரன்கள் எடுத்தார். எஞ்சிய விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் வீழ்ந்தன. இந்திய தரப்பில் சிக்ஷா பாண்டே, ருமேலி தார், ராஜேஷ்வரி கெய்க்வாட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். பூனம் யாதவ் ஒரு விக்கெட் எடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com