டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
 தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணத்தில் டெஸ்ட் தொடரை மட்டும் இழந்த இந்தியா, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை வசமாக்கி சாதனை படைத்தது.
 கேப் டவுனில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் அடித்து வீழ்ந்தது.
 முன்னதாக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச தீர்மானித்தது. பேட் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா-ஷிகர் தவன் களம் கண்டனர்.
 இதில் ரோஹித் சர்மா 2 பவுண்டரிகள் உள்பட 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சுரேஷ் ரெய்னா அதிராடியாக ஆடி 27 பந்துகளில் 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 43 ரன்கள் விளாசி வெளியேறினார். பின்னர் ஆடியவர்களில் ஷிகர் தவன் மட்டும் 3 பவுண்டரிகள் உள்பட 47 ரன்கள் அடித்தார். மணீஷ் பாண்டே 13, தோனி 12, ஹார்திக் பாண்டியா 21, தினேஷ் கார்த்திக் 13 ரன்களில் பெவிலியன் திரும்பினர். அக்ஸர் படேல் 1, புவனேஷ்வர் குமார் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
 தென் ஆப்பிரிக்க தரப்பில் ஜூனியர் டலா 3, கிறிஸ் மோரிஸ் 2, டப்ரைஸ் ஷம்சி ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தனர்.
 தென் ஆப்பிரிக்கா-165: பின்னர் 173 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர் ரீஸா ஹென்ட்ரிக்ஸ் 7 ரன்களில் வெளியேற, உடன்வந்த டேவிட் மில்லர் 24 ரன்களில் நடையைக் கட்டினார். ஹென்ரிச் கிளாசென் 7 ரன்கள் எடுத்திருந்தபோது, பாண்டியா பந்துவீச்சில், புவனேஷ்வர் குமாரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
 அரைசதம் கடந்த டுமினி, 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 55 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த கிறிஸ் மோரிஸ் 4 ரன்களில் நடையைக் கட்டினார். கடைசி விக்கெட்டாக ஜோன்கர் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பெஹார்டியன் 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
 இந்திய தரப்பில் புவனேஷ்வர் குமார் 2, பும்ரா, தாக்குர், பாண்டியா, ரெய்னா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com