இந்தியாவுக்கு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருது: கோலி பெற்றுக் கொண்டார்

ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்ட இந்திய அணிக்கு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருது வழங்கப்பட்டது. அதை, அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றுக்கொண்டார்.
இந்தியாவுக்கு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருது: கோலி பெற்றுக் கொண்டார்

ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்ட இந்திய அணிக்கு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருது வழங்கப்பட்டது. அதை, அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றுக்கொண்டார்.
 கேப் டவுனில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான கடைசி டி20 ஆட்டம் நிறைவடைந்த பிறகு, அந்த விருதை ஐசிசி சார்பில் சுனில் காவஸ்கர், கிரேமி பொல்லாக் ஆகியோர் இணைந்து கோலிக்கு வழங்கினர்.
 விருது பெற்ற பிறகு கோலி கூறியதாவது:
 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருதை மீண்டும் பெறுவது அற்புதமான உணர்வு. இது, கிரிக்கெட்டின் உண்மை வடிவமான டெஸ்ட் போட்டியில் எங்களது வெற்றிக்கு கிடைத்த அங்கீகாரமாகும். கடந்த 2 ஆண்டுகளாக எங்களின் சிறப்பான செயல்பாட்டின் காரணமாகவே டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறோம்.
 இந்தக் காலகட்டத்தில் அணியில் பங்களிப்பு செய்துவந்த அனைத்து வீரர்கள், உதவிப் பணியாளர்களுக்கு நன்றிகள். எங்களை ஊக்குவிக்கும் உலகளவிலான ரசிகர்களுக்கும் நன்றிகள் என்று கூறினார்.
 தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி, கடந்த மாதம் ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 3-ஆவது டெஸ்ட் போட்டியில் வென்றதன் மூலமாக, ஐசிசி டெஸ்ட் அணிகள் தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது. இதையடுத்து இந்திய அணிக்கு சாம்பியன்ஷிப் விருதும், ரூ.6.47 கோடி பரிசுத் தொகையும் உறுதியானது.
 இந்திய அணி, வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி வரையில் டெஸ்ட் தரவரிசை முதலிடத்தில் நீடிக்கும். 2-ஆவது முறையாக இந்த விருதை வெல்லும் இந்தியா, கடந்த 2016 செப்டம்பர் முதல் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பது நினைவுகூரத்தக்கது.
 இந்திய அணி கடந்த 2009 நவம்பர் முதல் 2011 ஆகஸ்ட் வரையில் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்ததே அணியின் அதிகபட்சமாகும். அப்போது தோனி கேப்டனாக இருந்தார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com