ரஞ்சி கோப்பை: விதர்பா முதன் இன்னிங்ஸில் 252 ரன்கள் முன்னிலை!

தில்லிக்கு எதிரான ஆட்டத்தில் 252 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
ரஞ்சி கோப்பை: விதர்பா முதன் இன்னிங்ஸில் 252 ரன்கள் முன்னிலை!

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் விதர்பா முதல் இன்னிங்ஸில் 163.4 ஓவர்களில் 547 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இதையடுத்து அந்த அணி தில்லிக்கு எதிரான ஆட்டத்தில் 252 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற விதர்பா, ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த தில்லி 102.5 ஓவர்களில் 295 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக துருவ் ஷோரே 145 ரன்கள் எடுத்தார். விதர்பாவின் ரஜ்னேஷ் குர்பானி 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய விதர்பா, 3-ம் நாள் ஆட்ட முடிவில் 156 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 528 ரன்கள் குவித்தது. வத்கர் 133, நெரால் 56 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இன்றைய நாளின் ஆட்டம் தொடங்கியபோது 233 ரன்கள் முன்னிலையுடன் இருந்த விதர்பா, 547 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 252 ரன்கள் முன்னிலை பெற்றது. தில்லி தரப்பில் நவ்தீப் சைனி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆகாஷ் சுதன், கெஜ்ரோலியா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

இன்னும் இரண்டு நாள்கள் மட்டுமே உள்ள நிலையில் தில்லி அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவது மிகக் கடினம். எனவே ரஞ்சி போட்டியை விதர்பா அணி வெல்ல பிரகாசமான வாய்ப்பு உருவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com