ஐபிஎல்: பெங்களூரு அணியின் பயிற்சியாளர்களாக நெஹரா, கேரி கிறிஸ்டன் நியமனம்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர்களாக முறையே தென் ஆப்பிரிக்கா முன்னாள்
ஐபிஎல்: பெங்களூரு அணியின் பயிற்சியாளர்களாக நெஹரா, கேரி கிறிஸ்டன் நியமனம்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர்களாக முறையே தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் கேரி கிறிஸ்டன், இந்திய முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், இந்த ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணிக்கு வழிகாட்டிகளாகவும் இருவரும் செயல்பட உள்ளனர்.
இதுதொடர்பான ஒப்பந்தத்தில் கிறிஸ்டன் கடந்த வாரம் கையெழுத்திட்டார். இதற்கு முன்பு கடந்த 2015-ஆம் ஆண்டு தில்லி டேர்டெவில்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இவர் இருந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு அணியின் தலைமைப் பயிற்சியாளராக கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவரும் நியூஸிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரியை அந்த அணி இந்த முறையும் தக்க வைத்துக்கொண்டது.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்களான டிரென்ட் வுட்ஹில், ஆன்ட்ரூ மெக்டோனல்ட் ஆகியோரும் பெங்களூரு அணியில் நீடிக்கின்றனர்.
ஃபீல்டிங் பயிற்சியாளராக வுட்ஹில்லும், பந்துவீச்சு திறன்மேம்பாடு பிரிவு பொறுப்பாளராக மெக்டோனல்டும் செயல்படுவார்கள். மெக்டோனல்ட், இதற்கு முன்பு பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்தார்.
இதுகுறித்து வெட்டோரி கூறுகையில், 'கேரி கிறிஸ்டன், நெஹரா ஆகியோர் பெங்களூருக்கு அணியின் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். இருவருக்கும் கிரிக்கெட்டில் அதிக அனுபவம் உள்ளது. அவர்களிடம் இருந்து அணி வீரர்கள் அதிகம் கற்றுக்கொள்ள முடியும்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com