கவாஜா அசத்தல் சதம்! 133 ரன்கள் முன்னிலையுடன் ஆஸி. ஆதிக்கம்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் ஆஸி. வீரர் உஸ்மான் கவாஜா மிகச்சிறப்பாக விளையாடி 171 ரன்கள் குவித்துள்ளார்...
கவாஜா அசத்தல் சதம்! 133 ரன்கள் முன்னிலையுடன் ஆஸி. ஆதிக்கம்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் ஆஸி. வீரர் உஸ்மான் கவாஜா மிகச்சிறப்பாக விளையாடி 171 ரன்கள் குவித்துள்ளார். ஆஸி. அணி 4 விக்கெட் இழப்புக்கு 479 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

சிட்னியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 112.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 346 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் அதிகபட்சமாக 83 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் அதிகபட்சமாக 4, ஸ்டார்க், ஹேஸில்வுட் தலா 2, நாதன் லயன் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா நேற்றைய ஆட்டத்தின் முடிவில் 67 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. உஸ்மான் கவாஜா 7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 91 ரன்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் 3 பவுண்டரிகள் உள்பட 44 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இன்றும் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்மித், எதிர்பாராத விதத்தில் 83 ரன்களில் மொயீன் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 222 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்த கவாஜா, 334 பந்துகளில் 150 ரன்கள் எடுத்தபோது அவர் இரட்டைச் சதமெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 171 ரன்களில் கிரேன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவருடைய அற்புதமான சதத்தால் ஆஸி அணி வலுவான நிலையை அடைந்துள்ளது.

3-ம் நாளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 157 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 479 ரன்கள் எடுத்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஷான் மார்ஷ் 98, மிட்செல் மார்ஷ் 63 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 6 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் ஆஸி. அணி 133 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் முதல் இன்னிங்ஸில் குறைந்தபட்சம் 300 ரன்கள் முன்னிலை பெற்று இந்த டெஸ்ட் போட்டியையும் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com