ஷமி, பூம்ராவின் சிறப்பான பந்துவீச்சால் தென் ஆப்பிரிக்க அணி தடுமாற்றம்!

95 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது தென் ஆப்பிரிக்கா..
ஷமி, பூம்ராவின் சிறப்பான பந்துவீச்சால் தென் ஆப்பிரிக்க அணி தடுமாற்றம்!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி தடுமாற்றம் கண்டு வருகிறது. ஷமி, பூம்ரா ஆகியோர் சிறப்பாகப் பந்துவீசி இந்திய அணிக்குப் பக்கபலமாக உள்ளார்கள்.

இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 73.1 ஓவர்களில் 286 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து ஆடிய இந்தியா, 73.4 ஓவர்களில் 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் 2-ஆவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்கா சனிக்கிழமை முடிவில் 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்தது. 

 3-ஆவது நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இந்நிலையில் இன்று ஆட்டம் தொடங்கிய நிமிடம் முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அசத்தி வருகிறார்கள். அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணியினரைத் திணறவைத்தார்கள். முதலில் ஆம்லா 4 ரன்களில் ஷமி பந்துவீச்சில் அவுட் ஆனார். பிறகு ஷமி, ரபடாவை 5 ரன்களில் வெளியேற்றினார். இதன்பிறகு பூம்ரா தனது திறமையை நிரூபித்தார். அடுத்தடுத்து டுபிளெஸ்ஸிஸ் (0), குயின் டி காக் (8 ரன்கள்) ஆகியோரை சொற்ப ரன்களில் வெளியேற்றினார். அடுத்ததாக பிளாண்டர் ஷமி பந்துவீச்சில் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் 95 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது தென் ஆப்பிரிக்கா.

தென் ஆப்பிரிக்க அணி 37 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. டி வில்லியர்ஸ் 29, மஹாராஜா 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 3 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் அந்த அணி 186 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com