10 கேட்சுகள்: விருத்திமான் சாஹா புதிய சாதனை!

இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்...
10 கேட்சுகள்: விருத்திமான் சாஹா புதிய சாதனை!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்ஸில் 130 ரன்களுக்குச் சுருண்டது. இதனால் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற 208 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.

2014-ல் மெல்போர்ன் டெஸ்டில் தோனி 9 டிஸ்மிஸல்கள் எடுத்தார். 8 கேட்சுகள் 1 ஸ்டம்பிங் என அந்த டெஸ்ட் போட்டியில் 9 டிஸ்மிஸல்களை நிகழ்த்தினார் தோனி. அச்சாதனையை சாஹா முறியடித்துள்ளார். கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் 10 கேட்சுகள் பிடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார் சாஹா.

டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பரின் அதிக டிஸ்மிஸல்கள்

11 ஜாக் ரஸல் vs தென் ஆப்பிரிக்கா, 1995
11 டிவில்லியர்ஸ் vs பாகிஸ்தான், 2013
10 பாப் டெய்லர் vs இந்தியா, 1980
10 ஆடம் கில்கிறிஸ்ட் vs நியூஸிலாந்து, 2000
10 விருத்திமான் சாஹா vs தென் ஆப்பிரிக்கா, 2018

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com