ஐசிசி விதிமுறைகளை மீறியதால் விராட் கோலிக்கு அபராதம்!

கோலியின் வாதத்தை நடுவர் ஏற்காததால் கோபத்தில் பந்தைத் தூக்கிக் கீழே எறிந்தார்...
ஐசிசி விதிமுறைகளை மீறியதால் விராட் கோலிக்கு அபராதம்!

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 92.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்கள் எடுத்தது. 28 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி மூன்றாவது நாள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்தது. போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று மாலை மழையால் சிறிதுநேரம் ஆட்டம் நிறுத்தப்பட்டு பிறகு மீண்டும் தொடங்கியபோது நடுவருடன் வாக்குவாதம் செய்தார் கோலி. மழையால் மைதானம் ஈரத்தன்மை கொண்டதாக இருந்ததால் பந்து அடிக்கடி ஈரமானது. இதனால் அதிருப்திக்குள்ளான கோலி, மைதான நடுவர் மேக்கேல் கஃப்பிடம் வாக்குவாதம் செய்தார். கோலியின் வாதத்தை நடுவர் ஏற்காததால் கோபத்தில் பந்தைத் தூக்கிக் கீழே எறிந்தார் கோலி. 

இதையடுத்து, ஐசிசி விதிமுறைகளுக்கு முரணாகச் செயல்பட்டதால் விராட் கோலிக்குப் போட்டி ஊதியத்திலிருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com