யு-19 உலகக் கோப்பை தொடர்: காலிறுதிக்கு இந்திய அணி தகுதி

19 வயதுக்குள்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப் 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார

19 வயதுக்குள்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப் 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
குரூப் பிரிவில் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்ற இந்தியா, காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.
நியூஸிலாந்தின் பே ஓவல் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குரூப் சுற்று ஆட்டத்தில் பப்புவா நியூ கினியா அணியை இந்தியா எதிர்கொண்டது.
டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.
பப்புவா அணி 21.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 64 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதையடுத்து, 65 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் விளையாடிய இந்தியா, 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 67 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் பிருத்வி ஷா 57 ரன்களும், மன்ஜோத் கல்ரா 9 ரன்களும் எடுத்திருந்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான குரூப் பிரிவு முதல் ஆட்டத்தில் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபாரா வெற்றி பெற்றது நினைவுகூரத்தக்கது.
குரூப் 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள மற்றொரு அணியான ஜிம்பாப்வே உடன் வரும் வெள்ளிக்கிழமை இந்தியா விளையாடுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com