ஆஸ்திரேலிய ஓபன்: 3-ஆவது சுற்றில் நடால், டிமிட்ரோவ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால், 3-ஆம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் ஆகியோர் 3-ஆவது
ஆஸ்திரேலிய ஓபன்: 3-ஆவது சுற்றில் நடால், டிமிட்ரோவ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால், 3-ஆம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.
இதில் நடால் தனது 2-ஆவது சுற்றில் ஆர்ஜென்டீனாவின் லியானார்டோ மேயரை 6-3, 6-4, 7-6(7/4) என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். அவர் தனது 3-ஆவது சுற்றில் போஸ்னியா வீரர் டாமிர் ஜும்ஹுரை எதிர்கொள்கிறார். முன்னதாக ஜும்ஹுர் தனது முந்தைய சுற்றில் ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மேனை 7-5, 3-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வென்றார்.
இதேபோல், போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருக்கும் டிமிட்ரோவ் 4-6, 6-2, 6-4, 0-6, 8-6 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் மெக்கான்ஸி மெக்டொனால்டை வென்றார். மற்றொரு 2-ஆவது சுற்றில் சைப்ரஸின் மார்கோஸ் பக்தாதிஸை 6-4, 6-7(5/7), 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்திய ரஷியாவின் ஆன்ட்ரே ருபலேவ், 3-ஆவது சுற்றில் கிரிகோர் டிமிட்ரோவை எதிர்கொள்கிறார்.
போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருக்கும் குரோஷியாவின் மரின் சிலிச் 6-1, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் போர்ச்சுகீசிய வீரர் ஜோவ் செளசாவை வென்றார். இதையடுத்து 3-ஆவது சுற்றில் அமெரிக்காவின் ரயான் ஹாரிசனை எதிர்கொள்கிறார். முன்னதாக ரயான் உருகுவேயின் பாப்லோ கியுவஸை 6-4, 7-6(7/5), 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியிருந்தார்.
ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ் 7-5, 6-4, 7-6(7/2) என்ற செட் கணக்கில் செர்பியாவின் விக்டர் டிராய்க்கியை வீழ்த்தி 3-ஆவது சுற்றில் பிரான்ஸின் ஜோ வில்ஃபிரைடு சோங்காவை எதிர்கொள்கிறார். போட்டித் தரவரிசையில் 15-ஆவது இடத்தில் இருக்கும் சோங்கா, கனடாவின் டெனிஸ் ஷபோவெலாவை 3-6, 6-3, 1-6, 7-6(7/4), 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
வோஸ்னியாக்கி வெற்றி
மகளிர் ஒற்றையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 3-6, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் ஜனா ஃபெட்டை வென்றார். அவர் தனது 3-ஆவது சுற்றில் நெதர்லாந்தின் கிகி பெர்டன்சை சந்திக்கிறார்.
போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருக்கும் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 4-6, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் காட்டெரினா சினியாகோவாவை வீழ்த்தினார். அடுத்த சுற்றில் ஸ்விடோலினா, சகநாட்டவரான மார்தா கொஸ்டிக்கை எதிர்கொள்கிறார்.
இதேபோல் மெக்தலினா ரைபரிகோவா 6-4, 0-6, 6-2 என்ற கணக்கில் பெல்ஜியத்தின் கிறிஸ்டென் ஃபிலிப்கென்ஸையும், எஸ்டோனியாவின் கயா கானெபி 6-4, 6-3 என்ற கணக்கில் போர்டா ரிகாவின் மோனிகா பிக்கையும் வீழ்த்தினர்.
போட்டித் தரவரிசையில் 12-ஆவது இடத்தில் இருந்த ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜஸ் 4-6, 3-6 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் அலிஸ் கோர்னெட்டிடம் வீழ்ந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com