சென்னை எனக்கு 2-ஆவது இல்லம்: எம்.எஸ்.தோனி

சென்னை எனக்கு 2-ஆவது இல்லம். இங்குள்ள ரசிகர்கள் என்னை அவர்களில் ஒருவராக பார்க்கின்றனர்' என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ்தோனி கூறினார்.
சென்னை எனக்கு 2-ஆவது இல்லம்: எம்.எஸ்.தோனி

சென்னை எனக்கு 2-ஆவது இல்லம். இங்குள்ள ரசிகர்கள் என்னை அவர்களில் ஒருவராக பார்க்கின்றனர்' என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ்தோனி கூறினார்.
சென்னையில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அப்போது, நிருபர்களிடம் அவர் கூறியது:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. முதலில் நிர்வாகம் எப்படி இருக்குமோ, உடன் விளையாடும் வீரர்கள் எப்படி இருப்பார்களோ, ரசிகர்களின் மனநிலை எப்படி இருக்குமோ என பல்வேறு கேள்விகள் எழுந்தன. ஆனால் சென்னை எனது இரண்டாவது இல்லம் என்பதில் மட்டும் சந்தேகம் இல்லை. சென்னை ரசிகர்கள் தான் அணியின் பலம். அவர்கள் என்னை தங்களில் ஒருவனாக பார்க்கின்றனர். அதைவிட பெரிய பரிசு வேறு எதுவும் இல்லை. 
ஆதரவு அதிகரித்திருக்கிறது: தமிழகத்தில் மட்டுமல்ல எங்கு சென்றாலும் சென்னை அணிக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக ஐபிஎல் போட்டியில் சென்னை அணி பங்கேற்கவில்லை என்றாலும், அணிக்கு ஆதரவு அதிகரித்திருக்கிறது. நான் எங்கு சென்றாலும் எனக்கு ரசிகர்கள் இருப்பர். எது செய்தாலும் பாராட்டுகள் குவியும். ஆனால் சென்னை ரசிகர்களின் பாராட்டே என்னை மிகவும் உற்சாகப்படுத்தும். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்கு 18 முதல் 20 வீரர்களை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளோம். 
அனைத்து வீரர்களும் தங்களது முழுத் திறமையை வெளிப்படுத்தும் சூழல், சிஎஸ்கேவில் எப்போதுமே இருக்கும். இதுவே சென்னை அணியின் சிறப்பு. அணியில் ஏற்ற, இறக்கங்கள் இருந்து கொண்டேதான் இருக்கும். இருப்பினும் கடினமான தருணங்களை சிறப்பாக எதிர்கொண்டுள்ளோம்.
அஸ்வினை மீண்டும் பெற முயற்சி: சென்னை அணி மீதான எதிர்பார்ப்பு இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை சிறந்ததாக மாற்றியுள்ளது. ஐபிஎல் போட்டிக்கு வலிமையான அணியைத் தேர்வு செய்வதே எங்கள் நோக்கம். அஸ்வின் சிறந்த வீரர் என்பதால் அவரை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி இருக்கும். இருப்பினும் அவரை சிஎஸ்கேவுக்கு மீண்டும் அழைத்து வருவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அணியில் உள்ளூர் வீரர்கள் இடம் பெறுவது அவசியம். அதேபோன்று பிராவோ, டூபிளெஸ்ஸிஸ், மெக்கல்லம் ஆகியோரையும் கருத்தில் கொள்வோம் என்று தோனி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் இந்தியா சிமென்ட்ஸ் முழுநேர இயக்குநர் ரூபா குருநாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தென் ஆப்பிரிக்க தொடர் குறித்து கருத்து
கடந்த ஆண்டில் சொந்த மண்ணில் வெற்றிகளை குவித்த இந்திய அணி, தற்போது ஆடி வரும் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரை அந்த அணியிடம் இழந்துள்ளது. இதுகுறித்து கேட்டதற்கு தோனி கூறியதாவது:
தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வி அடைந்திருந்தாலும் சில நேர்மறையான விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். டெஸ்ட் போட்டியில் ஓர் அணி வெற்றி பெற வேண்டுமெனில், 20 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்; இந்திய அணி அதைச் செய்திருக்கிறது.
இந்தியாவுக்கான வெற்றி தொலைவில் இல்லை. வெற்றி பெறுவது கடினம் என உணரும்போது டிராவை நோக்கிச் செல்ல வேண்டும். அதற்காக ரன்களை குறைவாக விட்டுக் கொடுத்து, அதிக ரன்களை எடுக்க வேண்டும் என்று தோனி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com