முதல் டி20 போட்டியிலும் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூஸிலாந்து!

பாகிஸ்தானின் சோகக்கதை டி20 போட்டியிலும் தொடர்கிறது. முதல் டி20 போட்டியில் 105 ரன்களுக்குச் சுருண்டு தோல்வியடைந்துள்ளது...
முதல் டி20 போட்டியிலும் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூஸிலாந்து!

பாகிஸ்தானின் சோகக்கதை டி20 போட்டியிலும் தொடர்கிறது. முதல் டி20 போட்டியில் 105 ரன்களுக்குச் சுருண்டு தோல்வியடைந்துள்ளது.

வெலிங்டனில் நடைபெற்று வரும் முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஒருநாள் போட்டியில் படுதோல்வி கண்ட பாகிஸ்தான் அணி, டி20யிலாவது அசத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் பரிதாப நிலையே ஏற்பட்டுள்ளது. 38 ரன்களுக்குள் முதல் ஆறு விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி, கடைசியில் 19.4 ஓவர்களில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. 

அதிகபட்சமாக, பாபர் அஸாம் 41 ரன்களும் ஹசன் அலி 23 ரன்களும் எடுத்தார்கள். மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்கள். நியூஸிலாந்தின் ரான்ஸ், செளதி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இந்த எளிதான இலக்கை 3 விக்கெட் இழப்புக்கு 15.5 ஓவர்களில் அடைந்தது நியூஸிலாந்து. முதலிரண்டு விக்கெட்டுகள் 8 ரன்களில் வீழ்ந்தாலும் அதன்பிறகு வந்த பேட்ஸ்மேன்கள் பொறுப்பாக விளையாடினார்கள். மன்ரோ கடைசிவரை ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் எடுத்தார். ப்ரூஸ் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். டெய்லர் 22 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூஸிலாந்து 1-0 என முன்னிலை வகிக்கிறது.

சமீபத்தில் நடைபெற்ற 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தானை 5-0 என ஒயிட்வாஷ் செய்தது நியூஸிலாந்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com