நான்கு முன்வரிசை பேட்ஸ்மேன்கள் டக் அவுட்! வோக்ஸ் அதிரடியால் சரிவிலிருந்து மீண்டெழுந்த இங்கிலாந்து!

120 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளையும் இழந்து பரிதாப நிலையில் தவித்தது...
நான்கு முன்வரிசை பேட்ஸ்மேன்கள் டக் அவுட்! வோக்ஸ் அதிரடியால் சரிவிலிருந்து மீண்டெழுந்த இங்கிலாந்து!

இதை யார் எதிர்பார்த்திருக்கமுடியும்? ஆஸ்திரேலியா கூட எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா இங்கிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது. வானிலையும் ஆடுகளமும் பந்துவீச்சுக்குச் சாதகமாக இருந்தாலும் இங்கிலாந்து அணியினரால் இந்தச் சூழலைச்
சமாளிக்கமுடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 8 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து. இதை நம்பமுடியாத நிலையில் இருந்தார்கள் இங்கிலாந்து ரசிகர்கள். பிறகு, 120 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளையும் இழந்து பரிதாப நிலையில் தவித்தது. முதல் ஆறு பேட்ஸ்மேன்களில் நான்கு பேர் டக் அவுட் ஆகி வெளியேறி அதிர்ச்சியளித்தார்கள். என்னங்கடா நடக்குது இங்கே என்று வியக்காத கிரிக்கெட் ரசிகர்களே இல்லை.

ஆனால், எந்தவொரு நிலைமையிலும் மீண்டெழுவதற்கான திறனை கொண்ட இங்கிலாந்து அணிக்கு இன்று உதவியவர் கிறிஸ் வோக்ஸ். மறுபக்கம் விக்கெட்டுகள் தொடர்ந்து விழுந்தபோதும் அவரை மட்டும் ஆஸ்திரேலியாவால் அசைத்துப்பார்க்க முடியவில்லை. நம்பமுடியாத பேட்டிங் என்பார்களே, அதுதான் இது. 82 பந்துகளில் 5 சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடித்து 78 ரன்கள் குவித்தார் வோக்ஸ்.  மார்கன் 33 ரன்களும் மொயீன் அலி 33 ரன்களும் கர்ரேன் 35 ரன்களும் எடுத்து தங்கள் பங்குக்கு அணிக்கு உதவினார்கள். ஏற்கெனவே மூன்று ஒருநாள் போட்டிகளிலும் தொடரை வென்றுள்ள இங்கிலாந்து, அடிலெய்டில் நடக்கும் இந்த 4-வது ஒருநாள் போட்டியில் 44.5 ஓவர்களில் 196 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்வரிசை வீரர்களின் பொறுப்பான பேட்டிங்கால் கெளரவமான ஸ்கோரை அடைந்தது இங்கிலாந்து. ஆஸ்திரேலிய அணித் தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளும் டை, ஹேஸில்வுட் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.

ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. டிராவிஸ் ஹெட் 49, மிட்செல் மார்ஷ் 23 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com