டெஸ்ட்: மேற்கிந்தியத் தீவுகள் அணியிடமே 43 ரன்களுக்குச் சுருண்ட வங்கதேச அணி!

முதல் நாளிலேயே 8 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 158 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது...
டெஸ்ட்: மேற்கிந்தியத் தீவுகள் அணியிடமே 43 ரன்களுக்குச் சுருண்ட வங்கதேச அணி!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் வங்கதேச அணி 8-வது இடத்திலும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 9-வது இடத்திலும் உள்ளன.

இந்நிலையில் நேற்று ஆண்டிகுவாவில் தொடங்கிய இரு அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்டில், முதலில் விளையாடிய வங்கதேச அணி, 18.4 ஓவர்களில் 43 ரன்களுக்குச் சுருண்டுள்ளது.

20 ஓவர்கள் கூட முழுமையாக விளையாடாத இந்த இன்னிங்ஸில், தொடக்க வீரர் லிடன் தாஸ் மட்டும் அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்தார். இதர வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார்கள். கேப்டன் ஷகிப் அல் ஹசன் உள்ளிட்ட நான்கு வீரர்கள் டக் அவுட் ஆனார்கள். 

கெமர் ரோச், 5 ஓவர்கள் வீசி 8 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கம்மிங்ஸ் 3 விக்கெட்டுகளும் ஹோல்டர் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 

1974-ல் இந்திய அணி 42 ரன்களுக்குச் சுருண்டது. அதற்குப் பிறகு ஓர் டெஸ்ட் அணி இவ்வளவு குறைவாக ரன்கள் எடுத்தது இப்போதுதான். மேலும் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி எடுத்துள்ள குறைந்தபட்ச டெஸ்ட் ஸ்கோரும் இதுவே. மேற்கிந்தியத் தீவுகளில் ஓர் அணி குறைவாக ரன்கள் எடுத்ததும் இப்போதுதான். 

இதன்பிறகு தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, 68 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்து முதல் நாளிலேயே 8 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 158 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஸ்மித் 58, பவல் 48 ரன்கள் எடுத்தார்கள். பிராத்வெயிட் 88 ரன்களுடனும் பிஷூ 1 ரன்னுடனும் களத்தில் உள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com