பதக்க வாய்ப்புள்ள வீரர்கள் பட்டியல்: ஒட்டுமொத்த ஹாக்கி அணி சேர்ப்பு

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள வீரர்களுக்கான பட்டியலில் (டாப்ஸ்) இந்திய ஹாக்கி அணியின் ஒட்டுமொத்த வீரர்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர். 

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள வீரர்களுக்கான பட்டியலில் (டாப்ஸ்) இந்திய ஹாக்கி அணியின் ஒட்டுமொத்த வீரர்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர். 
போட்டிகளுக்கு தயாராவதற்காக மத்திய அரசிடமிருந்து நிதியுதவி பெற வகை செய்யும் இந்தப் பட்டியலில் தனி நபர்கள் சேர்க்கப்பட்டு வந்த நிலையில், ஓர் ஒட்டுமொத்த அணி சேர்க்கப்படுவது இது முதல் முறையாகும்.
சமீபத்தில் நிறைவடைந்த சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்ற நிலையில், இந்தப் பட்டியலில் ஹாக்கி அணி சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஹாக்கி அணியில் உள்ள 18 வீரர்களுக்கும் தங்களை தயார்படுத்திக் கொள்ளும் வகையில் தலா ரூ.50,000 மாதந்தோறும் வழங்கப்படும். இதனிடையே, உலகக் கோப்பை போட்டி மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி தனது திறமையை வெளிப்படுத்துவதன் அடிப்படையில், டாப்ஸ் பட்டியலில் அந்த அணியை சேர்ப்பது தொடர்பாக முடிவு செய்யப்படும் என இந்திய விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு ரூ.6.62 லட்சமும், பஜ்ரங் புனியா, சுமித் ஆகியோருக்கு ரூ.3.22 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. ஜிம்னாஸ்டிக் வீரர் வீராங்கனைகளுக்கென ரூ.21.76 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
டென்னிஸ் வீரர் ராம்குமார் ராமநாதனுக்கு ரூ.12.57 லட்சம் வழங்கப்படும் நிலையில், வில்வித்தை வீராங்கனைகள் மூவருக்கு ரூ.11.48 லட்சம் வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com