பிரான்ஸின் வெற்றி கால்பந்துக்கு களங்கம்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் தங்களுக்கு எதிராக பிரான்ஸ் பெற்ற வெற்றி, கால்பந்துக்கு ஏற்பட்ட களங்கம் என்று பெல்ஜியம் அணி கோல் கீப்பர் திபெளத் கோர்டோய்ஸ் விமர்சித்துள்ளார்.
பிரான்ஸின் வெற்றி கால்பந்துக்கு களங்கம்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் தங்களுக்கு எதிராக பிரான்ஸ் பெற்ற வெற்றி, கால்பந்துக்கு ஏற்பட்ட களங்கம் என்று பெல்ஜியம் அணி கோல் கீப்பர் திபெளத் கோர்டோய்ஸ் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக பெல்ஜிய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
பிரான்ஸுக்கு எதிரான அரையிறுதி ஆட்டம் வெறுப்பூட்டுவதாக இருந்தது. உண்மையில் பிரான்ஸ் அணி விளையாடவே இல்லை. அந்த அணியின் 11 வீரர்களும் தங்களது கோல் போஸ்ட்டிலிருந்து 40 மீட்டருக்குள்ளாக சுற்றி நின்று தடுப்பாட்டம் மட்டுமே பெரும்பாலும் விளையாடினர்.
தாக்குதல் ஆட்டத்தை, அதிவேக வீரரான கைலியான் பாபே கொண்டு விளையாடினர். அது அவர்களது உரிமை. எதிரணி வீரர்கள் எப்போது தங்களது கோல் போஸ்ட்டுக்கு நெருக்கமாக விளையாடுவார்கள் என்பதை அவர்கள் நன்றாக அறிந்திருந்தனர். அந்த இடத்தில் நாங்கள் தவறு செய்துவிட்டோம்.
நாங்கள் அடைந்த தோல்வி எங்களுக்கு வெறுப்பு அளிக்கவில்லை. எங்களை விட சிறப்பாக விளையாடும் அணியிடம் தோற்றிருந்தால் மனம் தேறியிருப்போம்.
ஆனால், தடுப்பாட்டத்தை தவிர வேறு எதுவுமே செய்யாத அணியிடம் தோற்றது வெறுப்பாக இருக்கிறது. பிரான்ஸின் இந்த வெற்றி கால்பந்துக்கு ஓர் களங்கமாகும் என்று திபெளத் கோர்டோய்ஸ் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com