20 வயதுக்குட்பட்டோர் உலக தடகள சாம்பியன் போட்டி: 400 மீ இறுதியில் ஹிமா தாஸ்

20 வயதுக்குட்பட்டோர் உலக தடகள சாம்பியன் போட்டியில் இந்தியாவின் ஹிமா தாஸ் 400 மீ இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
20 வயதுக்குட்பட்டோர் உலக தடகள சாம்பியன் போட்டி: 400 மீ இறுதியில் ஹிமா தாஸ்

20 வயதுக்குட்பட்டோர் உலக தடகள சாம்பியன் போட்டியில் இந்தியாவின் ஹிமா தாஸ் 400 மீ இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
பின்லாந்தின் டாம்பியர் நகரில் உலக தடகள சாம்பியன் போட்டிகள் நடந்து வருகின்றன. இதன் 400 மீ அரையிறுதி தகுதிச் சுற்றில் 52.10 வினாடிகளில் கடந்து இறுதிக்கு முன்னேறினார். தொடக்க சுற்றுகளில் 52.25 வினாடிகளில் ஹிமா தாஸ் கடந்திருந்தார்.
இந்த பிரிவில் ஹிமா தாஸ் தங்கப்பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. குண்டு எறிதலில் ஆஷிஸ் ஜாக்கர் 70.52 மீ தூரம் எறிந்து இறுதிக்கு முன்னேறினார். ஹிமா தங்கம் வென்றால் முதன்முறையாக 20 வயதுக்குட்பட்டோர் உலக தடகள போட்டியில் தங்கம் வென்றவர் என்ற சிறப்பைப் பெறுவார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com