மதுரை பேந்தர்ஸ் அபார வெற்றி

சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பேந்தர்ஸ் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.

சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பேந்தர்ஸ் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கு இடையிலான டிஎன்பிஎல் 6-ஆவது ஆட்டம் திருநெல்வேலியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து மதுரை பேந்தர்ஸ் அணி வீரர்கள் அருண் கார்த்திக், டி.ரோஹித் ஆகியோர் களமிறங்கினர். துவக்கமே மதுரைக்கு சரிவாக அமைந்தது. அருண் 17 ரன்னுக்கும், ரோஹித் 1, நிலேஷ் சுப்பிரமணியம் 31, தலைவன் சற்குணம் 5 என சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். சிஜித் சந்திரன், ஜகதீசன் கெளஷிக் ஆகியோர் நிலைத்து ஆடி தலா 37 ரன்களை குவித்து வெளியேறினர். பின்னர் வந்த அபிஷேக் 14, கார்த்திகேயன் 3, கிரண் ஆகாஷ் 2, வருண் சக்கரவர்த்தி 1 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 
இறுதியில் மதுரை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 153 ரன்களை குவித்தது. சேப்பாக் தரப்பில் முருகன் அஸ்வின், சன்னிகுமார் சிங் தலா 3 விக்கெட்டையும், சித்தார்த் 2, அலெக்சாண்டர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய சேப்பாக் கில்லிஸ் அணி மதுரையின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சரிந்தது. கோபிநாத் 8, கங்கா ராஜு 24, கார்த்திக் 28, உத்திரசாமி சசிதேவ் 5, பாஸ்கரன் ராகுல் 9, முருகன் அஸ்வின் 22, சன்னிகுமார் 2, சிவக்குமார் 8, விஷார் 0, சித்தார்த் 14 ரன்களை எடுத்தனர். இறுதியில் சேப்பாக் அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 127 ரன்களை மட்டுமே எடுத்தது. மதுரை தரப்பில் வருண், ராஹில் சிங் தலா 3 விக்கெட்டையும், கிரண் ஆகாஷ் 2, ஜெகதீசன் கெளஷிக் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனால் 26 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை அணி வென்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com