இங்கிலாந்து - அயர்லாந்து அணிகள் மோதும் நான்கு நாள் டெஸ்ட்! அதிகாரபூர்வ அறிவிப்பு!

அயர்லாந்துக்கு எதிராக நான்கு நாள் டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது... 
இங்கிலாந்து - அயர்லாந்து அணிகள் மோதும் நான்கு நாள் டெஸ்ட்! அதிகாரபூர்வ அறிவிப்பு!

அயர்லாந்துக்கு எதிராக நான்கு நாள் டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

2019 உலகக் கோப்பை போட்டி முடிந்தபிறகு (மே 30  முதல் ஜூலை 14 வரை) லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 24 முதல் 27 வரை இந்த டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. அயர்லாந்து அணி கடந்த மே மாதம், பாகிஸ்தானுக்கு எதிராக தனது அறிமுக டெஸ்ட் போட்டியை விளையாடியது. 

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்டுக்குப் பிறகு இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1 முதல் ஆரம்பமாகவுள்ளது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் டெஸ்ட் தொடராக ஆஷஸ் நடைபெறவுள்ளது. 

நூறு வருடங்ளுக்கு முன்பு, அதாவது 1800களில் மூன்று நாள், நான்கு நாள் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. உலக லெவன் அணியுடன் ஆஸ்திரேலிய 2005-ல் விளையாடிய டெஸ்ட் போட்டி, 6 நாள் டெஸ்டாக விளையாடப்பட்டது. அதற்கு அதிகாரபூர்வ அந்தஸ்தும் அளித்தது ஐசிசி (ஆனால் அந்த டெஸ்ட் போட்டி நான்கு நாளில் முடிவுபெற்றது). இந்நிலையில் கடந்த டிசம்பரில், ஜிம்பாப்வேவுக்கு எதிராக முதல் 4 நாள் டெஸ்ட் போட்டியை விளையாடியது தென் ஆப்பிரிக்க அணி. பகலிரவு டெஸ்ட் போட்டியாக டிசம்பர் 26 முதல் 29 வரை நடைபெற்றது. எனினும் ஜிம்பாப்வேவுக்கு எதிரான நான்கு நாள் டெஸ்ட் போட்டியை தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 120 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டு நாள்களில் வென்றது. இதுபோன்ற நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளுக்கு ஐசிசி அதிகாரபூர்வ அந்தஸ்து அளித்துள்ளது. இதையடுத்து இங்கிலாந்து - அயர்லாந்து அணிகள் 4 நாள் டெஸ்ட் போட்டியில் மோதவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com