ஹாக்கி டெஸ்ட்: நியூஸிலாந்தை 4-2 என வீழ்த்தியது இந்தியா

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஹாக்கி டெஸ்ட் போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் இந்திய ஆடவர் அணி அபார வெற்றி பெற்றது.
நியூஸி. அணியை வென்ற மகிழ்ச்சியில் இந்திய ஹாக்கி வீரர்கள்.
நியூஸி. அணியை வென்ற மகிழ்ச்சியில் இந்திய ஹாக்கி வீரர்கள்.

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஹாக்கி டெஸ்ட் போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் இந்திய ஆடவர் அணி அபார வெற்றி பெற்றது.
ஆசிய விளையாட்டுப் போட்டி, உலக கோப்பை போட்டிகளுக்கு தயாராகும் வகையில் இந்திய அணி பல்வேறு போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக நியூஸிலாந்து அணியுடன் 3 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இதன் முதல் ஆட்டம் பெங்களூரு சாய் மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. தொடக்கம் முதலே இந்திய அணி வீரர்கள் ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
ரூபிந்தர் பால் சிங் (2) , மந்தீப் சிங், ஹர்மன்பிரீத் சிங் ஆகியோர் இந்திய அணி தரப்பில் கோலடித்தனர். நியூஸிலாந்து அணி தரப்பில் ஸ்டீபன் ஜென்னஸ் இரு கோல்களையும் அடித்தார். 
காமன்வெல்த் போட்டிக்கு பின்னர் காயத்தால் ஆடாமல் இருந்த ரூபிந்தர் பால் சிங் தற்போது மீண்டும் இணைந்துள்ள நிலையில் அபாரமாக ஆடினார். அவர் இரு கோல்களை அடித்து வெற்றிக்கு உதவினார். 
வரும் சனிக்கிழமை இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com