19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தியது இந்தியா

இலங்கையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோர் யூத் டெஸ்ட் ஆட்டத்தில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தியது.
19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தியது இந்தியா

இலங்கையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோர் யூத் டெஸ்ட் ஆட்டத்தில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தியது.
இந்திய அணி யூத் டெஸ்ட் ஆட்டங்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. கொழும்புவில் முதல் டெஸ்ட் ஆட்டம் நடந்தது. இதில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 70.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 244 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 134.5 ஓவர்களில் 10 விக்கெட்டை இழந்து 589 ரன்களை குவித்தது. அதர்வா டைட் 113, அனுஜ் ரவத் 63, நேஹால் 82, ஆயுஷ் பதானி 185) ரன்களை எடுத்தனர். 
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 95.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து வெறும் 324 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியின் நிஸான் மடுஷ்கா 104, நுவைண்டு பெர்ணான்டோ 78 ரன்களை எடுத்தனர். இந்திய தரப்பில் மொஹித் ஜாங்ரா 5, ஆயுஷ் பதானி 2, அர்ஜுன் டெண்டுல்கர், ஆகாஷ் பாண்டே தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இதன் மூலம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com