20 வயதுக்குட்பட்டோர் காட்டிஃப் கால்பந்து: இந்திய அணி ஸ்பெயின் பயணம்

ஸ்பெயினில் நடைபெறவுள்ள 20 வயதுக்குட்பட்டோர் சர்வதேச காட்டிஃப் கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக 25 பேர் கொண்ட இந்திய அணி சென்றுள்ளது.
காட்டிஃப் கால்பந்து போட்டிக்கு செல்லும் இந்திய அணி.
காட்டிஃப் கால்பந்து போட்டிக்கு செல்லும் இந்திய அணி.

ஸ்பெயினில் நடைபெறவுள்ள 20 வயதுக்குட்பட்டோர் சர்வதேச காட்டிஃப் கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக 25 பேர் கொண்ட இந்திய அணி சென்றுள்ளது.
பிஃபி 17 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பையில் பங்கேற்றோர், 19 வயதுக்குட்பட்ட தேசிய அணியில் இடம் பெற்றவர்கள் மட்டுமே இந்த அணியில் உள்ளனர். மிட்பீல்டர் ஹர்மன்பிரீத் சிங், ஜஷன்தீப் சிங் ஆகியோரும் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வரும் 23 முதல் 25-ஆம் தேதி வரை உள்ளூர் கிளப் அணிகளுடன் பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி பங்கேற்கும்.
இப்போட்டியில் வரும் 29-இல் முர்ஸியா, 31-இல் மெளரிடனியா, ஆக. 3-இல் வெனிஸþலா, 5-இல் ஆர்ஜென்டீனா நாடுகளின் 20 வயதுக்குட்பட்டோர் அணிகளுடன் இந்திய அணி மோதுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com