ஆசிய ஜூனியர் மல்யுத்தம்: மான்சிக்கு வெள்ளி, ஸ்வாதிக்கு வெண்கலம்

ஆசிய ஜூனியர் மல்யுத்தம் சாம்பியன் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிக்கிழமை தலா 1 வெள்ளி, வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
ஆசிய ஜூனியர் மல்யுத்தம்: மான்சிக்கு வெள்ளி, ஸ்வாதிக்கு வெண்கலம்

ஆசிய ஜூனியர் மல்யுத்தம் சாம்பியன் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிக்கிழமை தலா 1 வெள்ளி, வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
இறுதிச் சுற்றில் ஜப்பான் வீராங்கனை அகி ஹனாயை எதிர்த்து இந்தியாவின் மான்சி மோதினார். இதில் அகி தங்கம் வென்றார். மான்சிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
53 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் ஸ்வாதி ஷிண்டே, தாய்லாந்தின் துவன்னப்பா பூன்யாசு மோதினர். 
இதில் 10- 0 என்ற புள்ளி கணக்கில் ஸ்வாதி வென்று வெண்கலம் வென்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com