உலகக் கோப்பை மகளிர் ஹாக்கி: ஒலிம்பிக் சாம்பியன் இங்கிலாந்தை 1-1 என டிரா செய்தது இந்தியா; முன்னிலையை தவற விட்டது

உலகக் கோப்பை மகளிர் ஹாக்கி: ஒலிம்பிக் சாம்பியன் இங்கிலாந்தை 1-1 என டிரா செய்தது இந்தியா; முன்னிலையை தவற விட்டது

உலகக் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டி துவக்க ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியன் இங்கிலாந்தை 1-1 என்ற கோல் கணக்கில் இந்தியா டிரா செய்தது. எளிதில் கிடைத்த வெற்றி வாய்ப்பை இந்தியா தவற விட்டது.

உலகக் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டி துவக்க ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியன் இங்கிலாந்தை 1-1 என்ற கோல் கணக்கில் இந்தியா டிரா செய்தது. எளிதில் கிடைத்த வெற்றி வாய்ப்பை இந்தியா தவற விட்டது.
 லண்டன் நகரில் விட்டாலிட்டி உலகக் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டி சனிக்கிழமை தொடங்கியது. இதில் தலைசிறந்த 16 அணிகள் கலந்து கொண்டுள்ளன. 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடைபெறுகிறது. தொடக்க ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியன் இங்கிலாந்தும்-ஆசிய சாம்பியன் இந்தியாவும் மோதின.
 ஆட்டம் தொடங்கியதுமே இங்கிலாந்துக்கு முதல் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. எனினும் இந்திய அணி அந்த கோல் வாய்ப்பை தடுத்தது. பின்னர் இந்திய கேப்டன் ராணி ராம்பால், குர்ஜித் மோனிகா ஆகியோர் தாக்குதல் ஆட்டத்தை தொடங்கினர். இந்நிலையில் முதல் காலிறுதி ஆட்டத்தில் எந்த அணியும் கோல் போடவில்லை.
 இங்கிலாந்து அணிக்கு 3 பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தும் கோலடிக்க முடியவில்லை. முதல் பாதி முடிவடையும் நேரத்தில் இந்தியாவின் நேஹா கோயல் அற்புதமாக கோலடித்தார். இதனால் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.
 இதனால் அதிர்ச்சி அடைந்த இங்கிலாந்து அணி தனது தாக்குதலை தீவிரப்படுத்தியது. மூன்றாவது காலிறுதி ஆட்டத்தில் இந்தியா அணி தனது தற்காப்பு ஆட்டத்தை பலப்படுத்தியதால் எதிரணியால் கோலடிக்க முடியவில்லை.
 ஆட்டம் முடிய 11 நிமிடங்கள் இருந்த நிலையில் இந்திய வீராங்கனை லால்ரேமிசியாமி கோலடிக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இதற்கிடையே இந்திய வீராங்கனை தீபிகாவிடம் இருந்த கிடைத்த பந்தை பறித்து அற்புதமாக கோலடித்தார் இங்கிலாந்தின் லில்லி ஆஸ்லி.
 இதனால் 1-1 என ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. எளிதில் கிடைத்த வெற்றி வாய்ப்பை இந்திய மகளிர் அணி வீணடித்தது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.
 இந்திய கோல்கீப்பர் சவீதா புனியா தனது அனுபவ ஆட்டத்தால் இங்கிலாந்தின் 9 பெனால்டி கார்னர் கோல்வாய்ப்புகளை தடுத்தார். வரும் வியாழக்கிழமை 26-ஆம் தேதி அடுத்த ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்கொள்கிறது இந்தியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com