2018 கால்பந்து உலகக் கோப்பை: சிறந்த கோலைத் தேர்வு செய்தது ஃபிஃபா! (விடியோ)

உலகக் கோப்பைப் போட்டியில் அடிக்கப்பட்ட 169 கோல்களில் இதுவே சிறந்த கோலாக ரசிகர்கள் தேர்வு செய்துள்ளார்கள்...
2018 கால்பந்து உலகக் கோப்பை: சிறந்த கோலைத் தேர்வு செய்தது ஃபிஃபா! (விடியோ)

ரஷ்யாவில் இந்த ஆண்டு நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் குரோஷியாவை வீழ்த்தி பிரான்ஸ் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வென்றது. பிரான்ஸ் அணிக்கு ரூ.261 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பெற்ற குரோஷிய அணிக்கு ரூ.191 கோடி ரொக்கப் பரிசளிக்கப்பட்டது. 

இந்நிலையில் உலகக் கோப்பைப் போட்டிக்கான சிறந்த கோலைத் தேர்வு செய்துள்ளது சர்வதேசக் கால்பந்து சங்கமான ஃபிஃபா. வாக்கெடுப்பின் மூலமாக இந்த கோல் தேர்வாகியுள்ளது. 

ஆர்ஜென்டீனாவுக்கு எதிரான ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் பெஞ்சமின் பவர்ட் அட்டகாசமான கோலை அடித்தார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்த கோலின் மூலம் ஆட்டம் 2-2 என சமநிலைக்கு வந்தது. இதன்பிறகு  4-3 என வென்று காலிறுதிக்குத் தகுதி பெற்ற பிரான்ஸ், பிறகு கோப்பையை வென்றது.

உலகக் கோப்பைப் போட்டியில் அடிக்கப்பட்ட 169 கோல்களில் இதுவே சிறந்த கோல் என ரசிகர்கள் தேர்வு செய்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com