அதிக வருவாய் ஈட்டும் இன்ஸ்டாகிராம் பிரபலங்களில் இடம்பிடித்த விராட் கோலி

அதிக வருவாய் ஈட்டும் இன்ஸ்டாகிராம் பிரபலங்களின் பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி இடம்பிடித்துள்ளார்.
அதிக வருவாய் ஈட்டும் இன்ஸ்டாகிராம் பிரபலங்களில் இடம்பிடித்த விராட் கோலி

அதிக வருவாய் ஈட்டும் இன்ஸ்டாகிராம் பிரபலங்களின் பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி இடம்பிடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இளைஞர்களால் அதிகளவில் விரும்பப்படும் கிரிக்கெட் வீரர் மற்றும் பிரபலமாக திகழ்கிறார். இதனால் அவரது சமூக வலைதளப் பக்கங்களை பின்தொடர்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ஹாப்பர் ஹெச்.க்யூ எனும் அமைப்பு இன்ஸ்டாகிராமில் உள்ள அதிக வருவாய் ஈட்டும் பிரபலங்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கேப்டன் விராட் கோலியும் இடம்பிடித்துள்ளார். இதில் ஒவ்வொரு பிரபலங்களின் பதிவுகளாலும் ஏற்படும் வருவாய் ரீதியல் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. 

மொத்தம் 23.2 மில்லியன் பேர் விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப் பக்கத்தை பின்தொடர்பவர்களாக உள்ளனர். இதில் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர்களில் 9-ஆவது இடத்திலும், மொத்தத்தில் 17-ஆவது இடத்திலும் விராட் கோலி இடம்பிடித்துள்ளார். அவருடைய ஒவ்வொரு பதிவின் சராசரி வருமானம் 120,000 டாலர்களாகும்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com