இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: வரலாறு சொல்லும் உண்மையை மாற்றி எழுதுவாரா கோலி?

இங்கிலாந்தில் வெல்வது அவ்வளவு எளிதல்ல என்பதுதான் வரலாறு சொல்லும் பாடம்... 
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: வரலாறு சொல்லும் உண்மையை மாற்றி எழுதுவாரா கோலி?

1932 முதல், இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது இந்திய அணி. இங்கிலாந்தில் இரு அணிகளுக்கு இடையே இதுவரை நடைபெற்ற 17 டெஸ்ட் தொடர்களில் மூன்றில் மட்டுமே இந்திய அணி வென்றுள்ளது. 

1932-ல் ஆரம்பித்தாலும் முதல் தொடர் வெற்றி 1971-ல் தான் கிடைத்தது. 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என வென்று சரித்திரம் படைத்தது வடேகர் தலைமையிலான இந்திய அணி. இதன்பிறகு 1986-ல், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-0 என அசத்தலாக வென்று சாதித்தது கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி. இதன்பிறகு பலப்பல வருடங்கள் கழித்து, 2007-ல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி, 1-0 என வென்று புதிய சாதனை படைத்தது. அவ்வளவுதான். 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டி 20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. டி 20 தொடரை இந்தியாவும், ஒரு நாள் போட்டித் தொடரை இங்கிலாந்தும் வென்றன. இந்நிலையில் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை பர்மிங்ஹாமில் தொடங்குகிறது.

இங்கிலாந்தில் வெல்வது அவ்வளவு எளிதல்ல என்பதுதான் வரலாறு சொல்லும் பாடம். ஆனால் தென் ஆப்பிரிக்காவில் மூன்றாவது டெஸ்ட் வென்ற இந்திய அணி, வெளிநாடுகளில் தங்களால் தொடரையும் வெல்லமுடியும் என்கிற நம்பிக்கையில் உள்ளது. சாதித்துக் காட்டுமா கோலி படை?

இங்கிலாந்தில் நடைபெற்ற இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடர்கள்

டெஸ்டுகள் - 57
இந்திய அணியின் வெற்றிகள் - 6
இந்திய அணியின் தோல்விகள் - 30
டிராக்கள் - 21

இங்கிலாந்தில் நடைபெற்ற இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடர்கள்

 வருடம் டெஸ்டுகள் வெற்றிகள் தோல்விகள் டிராக்கள் முடிவுகள் 
 1932 1 0 1 0 0-1
 1936 3 0 2 1 0-2
 1946 3 0  1 2 0-1
 1952 4 0 3 1 0-3
 1959 5 0 5 0 0-5
 1967 3 0 3 0 0-3
 1971 3 1 0 2 1-0
 1974 3 0 3 0 0-3
 1979 4 0 1 3 0-1
 1982 3 0 1 2 0-1
 1986 3 2 0 1 2-0
 1990 3 0 1 2 0-1
 1996 3 0 1 2 0-1
 2002 4 1 1 2 1-1
 2007 3 1 0 2 1-0
 2011 4 0 4 0 0-4
 2014 5 1 3 1 1-3
 மொத்தம்  57 6 30 21 6 - 30

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com