கொரிய ஹாக்கி தொடர்: இந்திய மகளிருக்கு முதல் தோல்வி

மகளிர் ஹாக்கியில் தென் கொரியாவுக்கு எதிரான 3-ஆவது ஆட்டத்தில் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இதையடுத்து 5 ஆட்டங்களைக் கொண்ட இத்தொடரில்

மகளிர் ஹாக்கியில் தென் கொரியாவுக்கு எதிரான 3-ஆவது ஆட்டத்தில் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இதையடுத்து 5 ஆட்டங்களைக் கொண்ட இத்தொடரில் தென் கொரியா முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
சியோல் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய வீராங்கனை லால்ரெம்சியாமி கோலடிக்க, தென் கொரியாவுக்கான கோல்களை சியுல் கி சியோன், யுரிம் லீ ஆகியோர் அடித்தனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் ஆரம்பத்தில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. எனினும், முதல் 10 நிமிடங்களுக்கு பிறகு மீண்ட தென் கொரியா, இந்திய கோல் போஸ்டை நோக்கி முன்னேறத் தொடங்கியது.
அதன் பலனாக ஆட்டத்தின் 12-ஆவது நிமிடத்தில் அந்த அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை, சியுல் கி சியோன் தவறின்றி கோலாக்கினார். அதிலிருந்து இந்தியா மீளும் முன்பாகவே அடுத்த 2 நிமிடங்களில் தென் கொரியா 2-ஆவது கோலை எட்டியது. 14-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னரை அந்த அணியின் யுரிம் லீ கோலாக மாற்ற, தென் கொரியா 2-0 என முன்னிலை பெற்றது.
இந்தச் சூழலில் சற்று மீண்ட இந்தியாவுக்கு, 16-ஆவது நிமிடத்தில் முதல் கோல் வாய்ப்பு கிடைத்தது. இந்திய வீராங்கனை லால்ரெம்சியாமி ஃபீல்டு கோல் அடித்தார். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் தென் கொரியாவின் கோல் வாய்ப்புகளை திறம்படத் தடுத்த இந்தியா, தனக்கான 2-ஆவது கோல் வாய்ப்புக்காக போராடியது.
அணியின் 2 கோல் முயற்சிகளை தென் கொரிய கோல் கீப்பர் ஹீபின் ஜங் அரண்போல் தடுத்தார். இதேபோல், தென் கொரியாவுக்கு கிடைத்த 3 பெனால்டி வாய்ப்புகளை இந்திய கோல்கீப்பர் ரஜனி எடிமர்பு அருமையாகத் தடுத்தார். இறுதியில் இரு அணிகளுக்குமே கூடுதல் கோல் வாய்ப்பு கிடைக்காததால், தென் கொரியா 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
இந்தியா-தென் கொரியா இடையேயான 4-ஆவது ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com