கோவாவுக்கு எதிராக களம் காணுவாரா ஜேஜே?

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்தாட்டத்தில் சென்னையின் எஃப்சி-எஃப்சி கோவா அணிகள் மோதும் அரையிறுதியில், சென்னை வீரர் ஜேஜே களம் காணுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே
கோவாவுக்கு எதிராக களம் காணுவாரா ஜேஜே?

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்தாட்டத்தில் சென்னையின் எஃப்சி-எஃப்சி கோவா அணிகள் மோதும் அரையிறுதியில், சென்னை வீரர் ஜேஜே களம் காணுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
4-ஆவது சீசன் ஐஎஸ்எல் போட்டியில் சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் 2-ஆம் இடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. சென்னை- கோவா அணிகள் இடையேயான அரையிறுதியின் முதல் பகுதி ஆட்டம் கோவாவில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், அந்த ஆட்டத்தில் சென்னையின் நட்சத்திர ஸ்டிரைக்கரான ஜேஜே களம் காணுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலோங்கியுள்ளது. இந்திய கால்பந்து அணிக்காகவும் விளையாடி வரும் ஜேஜே, ஐஎஸ்எல்லின் முதல் 3 சீசன்களில் அதிக கோல்கள் அடித்த இந்திய வீரராக வலம் வந்தார். 
தொடக்க சீசனில் இருந்தே சென்னை அணிக்காக விளையாடி வரும் அவரை, இந்த சீசனில் சென்னை ரூ.1.3 கோடி கொடுத்து தக்க வைத்தது. ஆனால், முதல் 3 போட்டிகளில் அவர் கோல் ஏதும் அடிக்கவில்லை. எனினும், பயிற்சியாளர் ஜான் கிரேகரியின் நம்பிக்கையை வீணடிக்காத வகையில், அடுத்த 9 போட்டிகளில் 7 கோல்கள் அடித்து சென்னை அணியின் முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகித்தார்.
இதுகுறித்து ஜேஜே கூறுகையில், 'நடப்பு சீசனில் இதர அணிகளில் வெளிநாட்டு ஸ்டிரைக்கர்கள் கோல் அடித்துக் கொண்டிருந்தனர். ஆனால் சென்னை அணி, இந்திய ஸ்டிரைக்கர் வழிகாட்டலில் விளையாடி வருகிறது' என்றார்.
சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னதாகவே தகுதிபெற்றுவிட்டதால், நட்சத்திர ஸ்டிரைக்கரான ஜேஜே மும்பைக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் களமிறக்கப்படவில்லை. இச்சூழலில் அரையிறுதியில் அவர் களமிறக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com