முத்தரப்பு டி20: இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

நிடாஹஸ் கோப்பை முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
வெற்றி மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளும் மணீஷ்-தினேஷ்.
வெற்றி மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளும் மணீஷ்-தினேஷ்.

நிடாஹஸ் கோப்பை முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
இத்தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கையிடம் வீழ்ந்திருந்த இந்தியா, தற்போது 2-ஆவது ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியுள்ளது.
கொழும்பில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து வென்றது.
முன்னதாக, டாஸ் வென்ற இந்தியா பந்துவீச தீர்மானிக்க, பேட் செய்தது வங்கதேசத்தில் தமிம் இக்பால்-செüம்யா சர்கார் ஜோடி முதலில் களம் கண்டது. சர்கார் 14 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து லிட்டன் தாஸ் வந்தார்.
இக்பால் 4-ஆவது ஓவரில் 15 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். பின்னர் வந்த முஷ்ஃபிகர் ரஹிம் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 18 ரன்கள் சேர்த்தார்.
தொடர்ந்து வந்த மஹ்முதுல்லா ஒரு ரன் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். நிதானமாக ஆடி வந்த லிட்டன் தாûஸ 34 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தது சாஹல்-ரெய்னா இணை.
அடுத்து வந்த சபீர் ரஹ்மான் சற்று நிலைத்து 3 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உள்பட 30 ரன்கள் சேர்த்தார். பின்னர் வந்தவர்களில் மெஹதி ஹசன் 3 ரன்கள் எடுக்க, கடைசி விக்கெட்டாக ரூபெல் ஹுசைன் டக் அவுட்டானார்.
டஸ்கின் அகமது 8, முஸ்டஃபிஸுர் ரஹ்மான் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய தரப்பில் ஜெயதேவ் உனத்கட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் எடுக்க, விஜய் சங்கர் 2, யுவேந்திர சாஹல், ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
பின்னர் ஆடிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா 17 ரன்களில் ஆட்டமிழக்க, உடன் வந்த தவன் அரைசதம் கடந்து நிலைத்தார். இந்நிலையில், ரோஹித்தை தொடர்ந்து ரிஷப் பந்த் 7 ரன்களில் வெளியேற, சுரேஷ் ரெய்னா 28 ரன்கள் சேர்த்தார். கடைசி விக்கெட்டாக தவன் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 55 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
மணீஷ் பாண்டே-தினேஷ் கார்த்திக் கூட்டணி ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்தியது. பாண்டே 27, கார்த்திக் 2 ரன்கள் எடுத்தனர். வங்கதேச தரப்பில் ருபெல் ஹொசைன் 2, முஸ்டாஃபிஸுர் ரஹ்மான், டஸ்கின் அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். தமிழகத்தின் விஜய் சங்கர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
வங்கதேச இன்னிங்ஸ்
20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 139
லிட்டன்-34, சபிர்-30, முஷ்ஃபிகர்-18, டஸ்கின்-8*, 
முஸ்டாஃபிஸுர்-1*
பந்துவீச்சு: உனத்கட்-3/38, சங்கர்-2/32, சாஹல்-1/19, 
தாக்குர்-1/25.
இந்தியா இன்னிங்ஸ்
18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 140
தவன்-55, ரெய்னா-28, ரோஹித்-17 மணீஷ்-27*, தினேஷ்-2*
பந்துவீச்சு: ருபெல்-2/24, டஸ்கின்-1/28, முஸ்டாஃபிஸுர்-1/31.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com