ஐபிஎல் அட்டவணை

11-ஆவது இந்தியன் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 7-ஆம் தேதி தொடங்கி மே 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
ஐபிஎல் அட்டவணை

11-ஆவது இந்தியன் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 7-ஆம் தேதி தொடங்கி மே 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் திருவிழா போல் பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் இந்தப் போட்டியின் நிகழ் ஆண்டுக்கான அட்டவணை அண்மையில் வெளியிடப்பட்டது. இரண்டு முறை (2010, 2011) சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மூன்று முறை (2013, 2015, 2017) சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும் முதல் ஆட்டத்தில் மோதுகிறது. 
56 லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் முதலாவது தகுதிச்சுற்றிலும், அடுத்த 2 அணிகள் வெளியேற்றுதல் சுற்றிலும்(எலிமினேட்டர்) மோதும். முதல் தகுதிச்சுற்றில் வென்ற அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். தோல்வியைச் சந்தித்த அணி எலிமினேட்டர் சுற்றில் வென்ற அணியுடன் 2-ஆவது தகுதிச்சுற்றில் மோதும். இதில் வெல்லும் அணி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறும்.
சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், தில்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன. வெளியேற்றுதல் சுற்று, 2-ஆவது தகுதிச்சுற்று ஆட்டங்களுக்கான இடங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com