காமன்வெல்த் ராணி ராம்பால் தலைமையில் ஹாக்கி அணி

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க ராணி ராம்பால் தலைமையிலான இந்திய மகளிர் ஹாக்கி அணி புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க ராணி ராம்பால் தலைமையிலான இந்திய மகளிர் ஹாக்கி அணி புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.
18 பேர் கொண்ட இந்த அணிக்கு, கோல்கீப்பர் சவிதா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இப்போட்டியில் 'ஏ' பிரிவில் இந்திய அணியுடன், மலேசியா, வேல்ஸ், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் இடம்பிடித்துள்ளன.
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் ஏப்ரல் 4-ஆம் தேதி தொடங்கும் காமன்வெல்த் போட்டியில், இந்திய மகளிர் அணி ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
கொரிய ஹாக்கி தொடருக்கான அணியில் ஓய்வளிக்கப்பட்டிருந்த சவிதா, அணிக்கு திரும்பியுள்ளது சாதகம். அணியின் தடுப்பாட்டமும் தீபிகா, சுனிதா லக்ரா உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த வீராங்கனைகளோடு பலத்துடன் காணப்படுகிறது. கேப்டன் ராணி, லால்ரெம்சியாமி, வந்தனா கட்டாரியா ஆகியோரால் இந்தியாவின் தாக்குதல் ஆட்டம் சிறப்பாக இருக்கும்.
சர்வதேச தரவரிசையில் 10-ஆவது இடத்தில் இருக்கும் இந்திய அணி, உலகின் 2-ஆம் நிலையில் இருக்கும் இங்கிலாந்து, 4-ஆம் நிலையில் இருக்கும் நியூஸிலாந்து, 5-ஆம் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா அணிகளிடம் இருந்து கடுமையான போட்டியைச் சந்திக்கும்.
இதுகுறித்து இந்திய பயிற்சியாளர் ஹரேந்திர சிங் கூறுகையில், 'தற்போது அணியில் இருக்கும் வீராங்கனைகள் நீண்ட காலமாக ஒன்றாக விளையாடி வருகின்றனர். எனவே, ஆட்டம் குறித்த புரிதலும், களத்தில் அவர்களிடையே புரிந்துணர்வும் இருக்கும். சவிதா இணைந்திருப்பது அணிக்கு மேலும் பலம் சேர்க்கிறது' என்றார்.
இந்திய மகளிர் அணி கடந்த 2002-இல் இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில், இங்கிலாந்தை வீழ்த்தி தங்கம் வென்றது. பின்னர் 2006-இல் வெள்ளி வென்ற இந்தியா, 2010 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் 5-ஆம் இடமே பிடித்தது. இந்த சீசனில் இந்தியா பதக்கம் வெல்லும் என கேப்டன் ராணி ராம்பால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அணி விவரம்
சவிதா, ரஜனி எடிமர்பு 
(கோல்கீப்பர்கள்). 
தீபிகா, சுனிதா லக்ரா, 
தீப் கிரேஸ் எக்கா, 
குர்ஜித் கெளர், 
சுஷிலா சானு 
(தடுப்பாட்டக்காரர்கள்). 
மோனிகா, நமிதா டோப்போ, நிக்கி பிரதான், நேஹா கோயல், 
லிலிமா மின்ஸ் 
(நடுகள வீராங்கனைகள்). ராணி ராம்பால், வந்தனா கட்டாரியா, லால்ரெம்சியாமி, நவ்ஜோத் கெளர், 
நவ்னீத் கெளர், பூனம் ராணி 
(முன்கள வீராங்கனைகள்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com