முத்தரப்பு மகளிர் கிரிக்கெட் இந்திய அணி அறிவிப்பு

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மகளிர் அணியினர் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய மகளிர் அணி ஹர்மன்பிரீத் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மகளிர் அணியினர் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய மகளிர் அணி ஹர்மன்பிரீத் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
காயம் காரணமாக ஓய்வில் இருந்த பந்துவீச்சாளர் ஜுலன் கோஸ்வாமி, இந்த அணியில் இடம்பிடித்துள்ளார். ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாக இருக்கும் இந்த அணிக்கு தானியா பாட்டியா விக்கெட் கீப்பிங் செய்கிறார்.
மும்பையில் வரும் 22 முதல் 31-ஆம் தேதி வரையில் இந்தத் தொடர் நடைபெறுகிறது. 22-இல் இந்தியா-ஆஸ்திரேலியா, 23-இல் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து, 25-இல் இந்தியா-இங்கிலாந்து மோதுகின்றன. 26, 28, 29 தேதிகளில் முறையே இந்தியா-ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலியா-இங்கிலாந்து, இந்தியா-இங்கிலாந்து மோதும் ஆட்டம் நடைபெறுகிறது. இறுதி ஆட்டம் 31-ஆம் தேதி நடைபெறும்.
இந்திய அணி: ஹர்மன்பிரீத் கெளர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, மிதாலி ராஜ், வேதா கிருஷ்ணமூர்த்தி, ஜெமிமா ரோட்ரிகஸ், அனுஜா பாட்டீல், தீப்தி சர்மா, டானியா பாட்டியா, பூனம் யாதவ், எக்தா பிஷ்த், ஜுலன் கோஸ்வாமி, ஷிக்ஷா பாண்டே, பூஜா வஸ்த்ரகர், ருமேலி தார், மோனா மேஷ்ராம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com