'கோலி ஒரு கோமாளி'- முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் காட்டம்

விராட் கோலி ஒரு கோமாளி போன்று செயல்பட்டதாக முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் பால் ஹாரிஸ் கூறியுள்ளார்.
'கோலி ஒரு கோமாளி'- முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் காட்டம்

இந்திய அணிக் கேப்டன் விராட் கோலி ஒரு கோமாளி என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் பால் ஹாரிஸ் கூறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர் ரபாடா, 2-ஆவது டெஸ்டின் 2 இன்னிங்ஸ்களிலும் செய்த காரியத்தால் அவருக்கு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ள ரபாடா, தனது ஆக்ரோஷத்தை குறைத்துக்கொள்ள பழக வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், பால் ஹாரிஸ் இவ்விவகாரம் தொடர்பாக செய்துள்ள ட்வீட், கோலி ரசிகர்களிடைய பெரும் எதிர்ப்பை பெற்று வருகிறது. அவர் பதிவிட்டதாவது:

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முழுவதும் இந்திய கேப்டன் விராட் கோலி ஒரு கோமாளி போன்று செயல்பட்டார். ஆனால் அவருக்கு எந்த தண்டனையும் இல்லை. தற்போது சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலுக்கு (ஐசிசி) யார் மீது கோபம், ரபாடா மீதா? அல்லது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் மீதா? என்பது போன்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com