ரபாடா மேல்முறையீடு மார்ச் 19-ல் விசாரணை: 48 மணிநேரத்தில் தீர்ப்பு!

2 டெஸ்ட் போட்டிகளில் விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ரபாடா செய்திருந்த மேல்முறையீடு தொடர்பாக மார்ச் 19-ல் விசாரணை நடத்தப்படவுள்ளது.
ரபாடா மேல்முறையீடு மார்ச் 19-ல் விசாரணை: 48 மணிநேரத்தில் தீர்ப்பு!

ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரின் 2-ஆவது போட்டியில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ரபாடா செய்த காரியத்தால் அவருக்கு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

முதல் இன்னிங்ஸின் 52-ஆவது ஓவரில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மீது உரசியபடிச் சென்றார் ரபாடா. இதுதொடர்பாக கள நடுவர்கள் போட்டி நடுவரிடம் புகார் அளித்தனர். அதுபோல 2-ஆவது இன்னிங்ஸிலும் டேவிட் வார்னரின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். இதையும் நடுவர்கள் புகார் செய்தனர்.

இதுதொடர்பாக போட்டி நடுவர் நடத்திய விசாரணையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். இதனால் ரபாடா மீது ஐசிசி விதி லெவல் 2-ன் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. மேலும் அவருக்கு தண்டனைப் புள்ளிகள் 8-ஆகவும் அதிகரித்தது. எனவே போட்டி ஊதியத்தில் 50 சதவீத அபராதம், அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்தது.

இந்நிலையில், தன் மீதான தடையை எதிர்த்து ரபாடா மேல்முறையீடு செய்தார். இதுதொடர்பான விசாரணை வருகிற மார்ச் 19-ந் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான விசாரணை அதிகாரியாக நியூஸிலாந்தைச் சேர்ந்த மைக்கெல் ஹெரான் ஐசிசி-யால் நியமிக்கப்பட்டுள்ளார். விடியோ கான்ஃப்ரன்சிங் முறையில் நடத்தப்படும் இவ்விசாரணை தொடர்பான தீர்ப்பு அடுத்த 48 மணிநேரங்களில் வழங்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com