"ஏசியு அறிக்கை அடிப்படையிலேயே ஷமிக்கு ஐபிஎல், ஊதிய ஒப்பந்த வாய்ப்பு'

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஐபிஎல் போட்டியில் விளையாடுவது குறித்து, பிசிசிஐ ஊழல் தடுப்பு அமைப்பின் (ஏசியு) விசாரணை அறிக்கை வரும் வரையில் முடிவு எடுக்கப்படாது என்று

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஐபிஎல் போட்டியில் விளையாடுவது குறித்து, பிசிசிஐ ஊழல் தடுப்பு அமைப்பின் (ஏசியு) விசாரணை அறிக்கை வரும் வரையில் முடிவு எடுக்கப்படாது என்று பிசிசிஐ தலைவர் (பொறுப்பு) சி.கே.கன்னா கூறியுள்ளார்.
இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான் குடும்ப வன்முறை புகார் அளித்துள்ளார். இந்நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் முகமது பாய் என்பவரிடம் இருந்து அலிஷ்பா என்ற பெண் மூலமாக முகமது ஷமி பணம் பெற்றதாக அவரது மனைவி ஹசினின் செல்லிடப்பேசி பதிவு வெளியானது.
இதையடுத்து, அந்தப் பணம் பெற்ற விவகாரம் குறித்து பிசிசிஐ ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தி ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வினோத் ராய் தலைமையிலான பிசிசிஐ நிர்வாகக் குழு உத்தரவிட்டது. இந்நிலையில், ஐபிஎல் நிர்வாக கவுன்சில் கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பிசிசிஐ தலைவர் சி.கே.கன்னாவிடம், ஐபிஎல் போட்டியில் முகமது ஷமியின் வாய்ப்பு குறித்து கேட்கப்பட்டது.
அப்போது அவர், "நீரஜ் குமார் தலைமையிலான பிசிசிஐ ஊழல் தடுப்பு அமைப்பு தாக்கல் செய்யும் விசாரணை அறிக்கையின் அடிப்படையிலேயே முடிவுகள் மேற்கொள்ளப்படும். அதையும் வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக் குழுவே எடுக்கும். ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி சார்பில் ஷமி விளையாடுவதை அந்த அணி நிர்வாகம் முடிவு செய்யும்' என்றார்.
இந்த ஐபிஎல் சீசனில் முகமது ஷமியை டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரூ.3 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. 
ஊதிய ஒப்பந்தம்: இதனிடையே, ஏசியு அறிக்கையில் முகமது ஷமி மீது எந்தத் தவறும் இல்லை எனத் தெரியவரும் பட்சத்தில், அவருக்கான ஊதிய ஒப்பந்தமும் அளிக்கப்படும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சமீபத்தில், இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான திருத்தப்பட்ட ஊதிய ஒப்பந்தப் பட்டியல் வெளியான நிலையில், முகமது ஷமியின் பெயர் அதில் இடம்பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com