'சிக்ஸர்' தினேஷ் கார்த்திக் நிகழ்த்திய புதிய சாதனைகள்!

கடைசிப் பந்தில் 5 அல்லது அதற்கும் மேற்பட்ட ரன்கள் வெற்றிக்குத் தேவைப்படுகிறபோது சிக்ஸர் அடித்த ஒரே பேட்ஸ்மேன்...
'சிக்ஸர்' தினேஷ் கார்த்திக் நிகழ்த்திய புதிய சாதனைகள்!

8 பந்துகளில் 29 ரன்கள் எடுத்த தினேஷ் கார்த்திக் பல சாதனைகளைப் புரிந்துள்ளார்.

நிடாஹஸ் கோப்பை முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா வங்கதேசத்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் ஆனது.

இந்தியா, இலங்கை, வங்கதேச அணிகள் பங்கேற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்றது. இத்தொடரின் இறுதி ஆட்டத்துக்கு இந்தியா-வங்கதேசம் அணிகள் முன்னேறின. கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து வென்றது.

ரோஹித் சர்மா ரன்கள் குவித்தும் தோல்வியை தழுவும் நிலைக்கு சென்றது இந்திய அணி. எனினும், அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி அணியை "த்ரில்' வெற்றி பெறச் செய்தார். 

ஆட்டத்தின் கடைசிக்கட்டத்தில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக், பவுண்டரி, சிக்ஸர்களுக்குப் பந்தை விரட்டினார். கடைசியாக ஒரு பந்தில் 5 ரன்கள் தேவை இருந்த நிலையில், சிக்ஸர் விளாசி ஆட்டத்தை முடித்தார். தினேஷ் 8 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 29 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் ரன்கள் இன்றியும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

* தினேஷ் கார்த்திக் களமிறங்கியபோது இந்திய அணி 12 பந்துகளில் 34 ரன்கள் எடுக்கவேண்டியிருந்தது. தினேஷ் கார்த்திக் எதிர்கொண்ட 8 பந்துகளில் கிடைத்த 29 ரன்கள்

6 4 6 . 2 4 1 6

* டி20 சர்வதேசப் போட்டிகளில் இதற்கு முன்பு சிக்ஸ் அடித்து எந்த அணியாவது வெற்றி பெற்றதுண்டா?

5 போட்டிகளில் சிக்ஸ் அடித்து வெற்றி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் கடைசிப் பந்தில் 5 அல்லது அதற்கும் மேற்பட்ட ரன்கள் வெற்றிக்குத் தேவைப்படுகிறபோது சிக்ஸர் அடித்த ஒரே பேட்ஸ்மேன் - தினேஷ் கார்த்திக்.

* டி20 இறுதிப் போட்டியில் எந்த ஓர் அணியும் ஒரு ரன்னுக்கு மேல் அடித்து வெற்றி கண்டதில்லை. ஆனால் நேற்றைய ஆட்டத்தில், தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடித்து சாதனை படைத்துள்ளார். 

* குறைந்த பந்துகளைச் சந்தித்து பேட்டிங் அடிப்படையில் ஆட்ட நாயகன் விருது பெற்றவர்கள்

8 - தினேஷ் கார்த்திக் (29*) vs இலங்கை, கொழும்பு, 2018 
8 - பிராட் ஹாட்ஜ் (21*) vs தென் ஆப்பிரிக்கா, டர்பன் 2014
9 - ராம்நரேஷ் சர்வான் (19*) vs இங்கிலாந்து ஓவல் 2009

* டிசம்பர் 1, 2016 அன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி தன்னுடைய முதல் சர்வதேச டி20 போட்டியில் விளையாடியது. அந்தப் போட்டியிலும் தினேஷ் கார்த்திக் ஆட்ட நாயகன் விருது
பெற்றார். அந்த அணியில் இடம்பெற்றவர்களில் தினேஷ் கார்த்திக்கும் ரெய்னாவும் மட்டுமே நேற்றைய ஆட்டத்தில் இடம்பெற்றார்கள். 

* இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியதிலிருந்து 7 முறை ரன் சேஸிங்கில் தினேஷ் கார்த்திக் பங்கேற்றுள்ளார் (3 ஒருநாள் & 4 டி20). இந்த 7 சேஸிங்கிலும் தினேஷ் கார்த்திக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். 

* இந்திய அணி மூன்று சர்வதேச டி20 போட்டிகளை வென்றுள்ளது. வேறு எந்த அணியும் மூன்று போட்டியை வென்றதில்லை.

2007 டி20 உலகக் கோப்பை, ஆசிய கோப்பை 2016, நிடாஹஸ் கோப்பை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com