நிடாஹஸ் நினைவலைகள் வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும்

நிடாஹஸ் கோப்பை இறுதி ஆட்டத்தின் தருணங்கள் வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும் என்று இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கூறினார்.
நிடாஹஸ் நினைவலைகள் வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும்

நிடாஹஸ் கோப்பை இறுதி ஆட்டத்தின் தருணங்கள் வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும் என்று இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கூறினார்.
இந்தியா, இலங்கை, வங்கதேச அணிகள் பங்கேற்ற அந்த முத்தரப்பு டி20 இலங்கையில் நடைபெற்றது. அதன் இறுதி ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி 'த்ரில்' வெற்றி கண்டது.
முன்னதாக, 167 ரன்களை நோக்கி ஆடிய இந்தியா கடைசி 2 ஓவர்களுக்கு 34 ரன்கள் எடுக்க வேண்டிய இக்கட்டான சூழலில் தினேஷ் கார்த்திக் களம் கண்டார். முதல் 3 பந்துகளை முறையே சிக்ஸர், பவுண்டரி, சிக்ஸர் என விரட்டி வங்கதேச அணியை நிலைகுலையச் செய்தார்.
இவ்வாறாக, கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை இருந்த நிலையில் விஜய் சங்கர் பந்துகளை வீணாக்கினார். பின்னர் அவரும் ஆட்டமிழந்து, வாஷிங்டன் களத்துக்கு வர, ஒரு பந்துக்கு 5 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது இந்தியா.
ஏறத்தாழ வெற்றி வங்கதேசம் பக்கம் சாய்ந்துவிட்ட நிலையில், கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி இந்தியாவை வெற்றி பெறச் செய்தார் தினேஷ் கார்த்திக். அவர் 8 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 29 ரன்கள் அடித்திருந்தார்.
அந்தத் தருணம் குறித்து பின்னர் தினேஷ் கூறியதாவது:
நான் பேட் செய்த ஒவ்வொரு பந்திலும் பவுண்டரி அடிக்க முயற்சித்தேன். கடைசி இரு ஓவர்களில் பந்தை கணிப்பதற்காக எல்லைக் கோட்டை (க்ரீஸ்) தாண்டி நின்றேன். அதற்கு பலன் கிடைத்தது. கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தது ஓர் அருமையான தருணம். அது, வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும்.
இறுதி ஆட்டத்தில் இலங்கை ரசிகர்கள் இந்தியாவுக்கு அளித்த ஆதரவு ஆச்சர்யமளித்தது. உண்மையில் பேட்டிங்கின்போது அது மிகவும் உந்துதலாக இருந்தது. கடின உழைப்பு மேற்கொண்டிருந்ததால், இறுதியில் சாம்பியன் ஆனது திருப்தி அளிப்பதாக உள்ளது. எனக்கு அளித்த ஆதரவுக்காக அணியின் உதவிப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று தினேஷ் கார்த்திக் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com