தொடரும் ஆதிக்கம்: டி20 ஆட்டத்திலும் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா!

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று தொடங்கியது...
தொடரும் ஆதிக்கம்: டி20 ஆட்டத்திலும் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா!

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று தொடங்கியது. இதில் முதல் ஆட்டத்தில் இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்திய அணி சமீபத்தில் இதே ஆஸ்திரேலிய அணியிடம் ஒருநாள் தொடரை 0-3 என முழுமையாக இழந்துள்ளது. எனினும், அதற்கு முன்பாக தென் ஆப்பிரிக்காவுடனான டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. மந்தனா 30 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். மிதாலி ராஜ் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு 67 ரன்களில் மந்தனா வெளியேறினார். அனுஜா பாட்டீல் 20 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. 

திறமையான வீராங்கனைகளைக் கொண்ட ஆஸ்திரேலிய அணி இந்த இலக்கை 18.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு வென்றது. தொடக்க வீராங்கனை மூனி 32 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து பலமான தொடக்கத்தை ஏற்படுத்திக்கொடுத்தார். நடுவரிசை வீராங்கனை விலானி 39 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அருகில் நிறுத்தினார். கேப்டன் லேனிங் 25 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஹேய்ன்ஸ் ஆட்டமிழக்காமல் 12 ரன்கள் எடுத்தார். இந்திய அணித் தரப்பில் கோஸ்வாமி 3 விக்கெட் எடுத்தாலும் ஆஸி. அணியின் வெற்றியைத் தடுத்து நிறுத்தமுடியாமல் போனது. 

ஞாயிறன்று நடைபெறுகிற டி20 ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com