மகளிர் முத்தரப்பு டி20: இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி மும்பையில் வியாழக்கிழமை தொடங்குகிறது. இதில் முதல் ஆட்டத்தில் இந்திய-ஆஸ்திரேலிய அணிகள்
முத்தரப்பு டி20 போட்டிக்கான கோப்பையுடன் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத், ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லேனிங், இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட்.
முத்தரப்பு டி20 போட்டிக்கான கோப்பையுடன் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத், ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லேனிங், இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட்.

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி மும்பையில் வியாழக்கிழமை தொடங்குகிறது. இதில் முதல் ஆட்டத்தில் இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.
இந்திய அணியை பொருத்த வரையில் சமீபத்தில் இதே ஆஸ்திரேலிய அணியிடம் ஒருநாள் தொடரை 0-3 என முழுமையாக இழந்துள்ளது. எனினும், அதற்கு முன்பாக தென் ஆப்பிரிக்காவுடனான டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
அந்த வெற்றி அனுபவம் இந்தியாவுக்கு இத்தொடரில் கைகொடுக்கலாம். பேட்டிங்கில் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சிறப்பான தொடக்கத்தை அளிப்பார் என எதிர்பார்க்கலாம்.
அவரைத் தொடர்ந்து மிடில் ஆர்டரில் கேப்டன் ஹர்மன்பிரீத் கெளர், மிதாலி ராஜ் ஆகியோர் அணியின் ஸ்கோரை உயர்த்த வாய்ப்புள்ளது. வேதா கிருஷ்ணமூர்த்தி, பூஜா வஸ்த்ரகர் ஆகியோரும் ரன்கள் சேர்க்க முனைவர். ஒருநாள் தொடரின் கடைசி ஆட்டத்தில் தொடக்க வீராங்கனையாக களம் கண்ட ஜெமிமா ரோட்ரிகஸ், இந்த ஆட்டத்திலும் சிறப்பாக பங்களிக்க வாய்ப்புள்ளது.
பந்துவீச்சில், வேகப்பந்து வீச்சாளர் ஜுலன் கோஸ்வாமி அணிக்கு திரும்பியிருப்பது பலமாகும். ஒருநாள் தொடரில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய ஷிக்ஷா பாண்டே அவருக்கு பக்கபலமாக இருப்பார். தீப்தி சர்மா, பூனம் யாதவ் ஆகியோர் தங்களது சுழற்பந்துவீச்சால் ஆஸ்திரேலிய விக்கெட்டுகளை வீழ்த்த உதவுவர். மறுபுறம், ஆஸ்திரேலிய அணியைப் பொருத்த வரையில், ஒருநாள் தொடர் வெற்றி தந்த ஊக்கத்தால் இத்தொடரில் பலத்துடன் களம் காண்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஒருநாள் தொடரில் ரன் சேகரிக்கத் தவறிய கேப்டன் மெக் லேனிங், இந்தத் தொடரில் அதை நிறைவேற்றும் எதிர்பார்ப்புடன் உள்ளார்.
விக்கெட் கீப்பர் அலிசா ஹீலி இந்திய பந்துவீச்சை பதம் பார்க்க தயாராக உள்ளார். கடைசி ஒருநாள் ஆட்டத்தில் அவர் சதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய பேட்ஸ்வுமன்களை கட்டுப்படுத்தும் பணியை பந்துவீச்சாளர்களான ஜெஸ் ஜோனஸ்ùஸன், அமன்டா வெலிங்டன், ஆஷ்லே கார்டனர் உள்ளிட்டோர்
மேற்கொள்வர்.
அணிகள் விவரம் 
இந்தியா
ஹர்மன்பிரீத் கெளர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, மிதாலி ராஜ், வேதா கிருஷ்ணமூர்த்தி, ஜெமிமா ரோட்ரிகஸ், அனுஜா பாட்டீல், தீப்தி சர்மா, தானியா பாட்டியா, பூனம் யாதவ், ஜுலன் கோஸ்வாமி, ஷிக்ஷா பாண்டே, பூஜா வஸ்த்ரகர், ருமேலி தார், மோனா மேஷ்ராம், ராஜேஷ்வரி கெய்க்வாட்.
ஆஸ்திரேலியா
மெக் லேனிங் (கேப்டன்), ரேச்சல் ஹேனஸ், நிகோலா கேரி, ஆஷ்லே கார்டனர், அலிசா ஹீலி, ஜெஸ் ஜோனசென், டெலிசா கிம்மின்ஸ், சோபி மோலினியுக்ஸ், பெத் மூனி, எலிஸ் பெர்ரி, மீகன் ஷட், நவோமி ஸ்டாலன்பெர்க், எலிஸ் விலானி, அமன்டா வெலிங்டன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com