டெஸ்ட்: இங்கிலாந்தை வீழ்த்திய நியூஸிலாந்து!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது... 
டெஸ்ட்: இங்கிலாந்தை வீழ்த்திய நியூஸிலாந்து!

நியூஸிலாந்து 427/8 (நிகோல்ஸ் 145*, வில்லியம்சன் 102) vs இங்கிலாந்து 58 (போல்ட் 6-32, செளதி 4-25) & 320 (ஸ்டோக்ஸ் 66, ஸ்டோன்மேன் 52)

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. 

ஆக்லாந்தில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கிரெய்க் ஓவர்டன் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூஸிலாந்தில் போல்ட் 6, செளதி 4 விக்கெட்டுகள் சாய்த்தனர். நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 141 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 427 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

நேற்றைய நாளின் முடிவில் இங்கிலாந்து அணி 46.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. நியூஸிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட மேலும் 237 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், அணியின் வசம் 7 விக்கெட்டுகள் இருந்தன. இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை ஆடிய நியூஸிலாந்து அணி 320 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைச் சந்தித்தது. 

இரண்டாவது இன்னிங்ஸில் குக்கைத் தவிர இதர இங்கிலாந்து வீரர்கள் ஓரளவு தாக்குப்பிடித்தார்கள். ஸ்டோன்மேன், ரூட், ஸ்டோக்ஸ், வோக்ஸ் ஆகிய வீரர்கள் அரை சதமெடுத்தார்கள். எனினும் முதல் இன்னிங்ஸில் செய்த தவறால் இந்தப் பெரிய தோல்வியை அவர்களால் தவிர்க்கமுடியாமல் போனது. இரண்டாவது இன்னிங்ஸில் நியூஸிலாந்துத் தரப்பில் போல்ட், வாக்னர், ஆஸ்ட்லே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

இந்த டெஸ்டில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய போல்ட் ஆட்ட நாயகனாகத் தேர்வானார். 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. அடுத்த டெஸ்ட், மார்ச் 30 அன்று தொடங்கவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com