ஆஸ்திரேலிய அணியின் வாட்சப் குரூப்பிலிருந்து விலகினார் டேவிட் வார்னர்!

ஆஸ்திரேலிய அணியின் வாட்சப் குரூப்பிலிருந்து டேவிட் வார்னர் விலகியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆஸ்திரேலிய அணியின் வாட்சப் குரூப்பிலிருந்து விலகினார் டேவிட் வார்னர்!

ஆஸ்திரேலிய அணியின் வாட்சப் குரூப்பிலிருந்து டேவிட் வார்னர் விலகியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது.

கடந்த 1-ம் தேதி தொடங்கிய முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், 3-ஆவது டெஸ்ட் ஆட்டம் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்த முயன்றது விடியோவில் பதிவாகியது. இது ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் உதவியுடன் செய்யப்பட்டதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டை ஸ்மித்தும், பேன்கிராஃப்டும் ஒப்புக் கொண்டுள்ளனர். அத்துடன், அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஸ்மித்தும், துணை கேப்டன் பொறுப்பிலிருந்து டேவிட் வார்னரும் விலகிக் கொள்வதாக அறிவித்தனர்.

ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் உள்பட அந்நாட்டில் பல்வேறு தரப்புகளிலிருந்து இவர்களின் செயலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. அந்நாட்டிலிருந்து வெளிவரும் பிரபல பத்திரிகைகளும் அவர்களை கடுமையாக சாடி முதல் பக்கத்தில் செய்திகளை வெளியிட்டுள்ளன. சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்களும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கடைசி டெஸ்ட் போட்டியில் ஸ்மித் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் அவருக்குப் பதிலாக மேட் ரென்ஷா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நடைபெற்ற சம்பவங்களால் ஆஸ்திரேலிய துணை கேப்டன் டேவிட் வார்னர் மிகுந்த மனவருத்தத்துக்கு ஆளாகியுள்ளார். அவருடைய நடவடிக்கைகள் கவலையளிக்கும்படி உள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது. சக வீரர்களிடம் அவர் அதிகம் கோபப்படுவதாகவும் தனிமையை விரும்பும் மனிதராக மாறிவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

மேலும், ஆஸ்திரேலிய அணி வீரர்களின் வாட்சப் குரூப்பிலிருந்து டேவிட் வார்னர் விலகியுள்ளதாகவும் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வார்னரின் நடவடிக்கைகளால் அவருக்கும் இதர வீரர்களுக்கும் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதால் அவரை வேறொரு ஹோட்டலுக்கு மாற்றிவிடும்படி கிரிக்கெட் ஆஸ்திரேலிய நிர்வாகத்திடம் வீரர்கள் சிலர் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிகிறது. 

வார்னரின் சினத்துக்குக் காரணம்? பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் அதுபற்றிய ஆலோசனையை வழங்கியவர், வார்னர்தான். அதை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தினார் ஸ்மித். கடைசியில் இது ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய அவமானத்தைத் தேடித்தந்துவிட்டது. அதனால்தான் வார்னருடைய நடவடிக்கைகள் தற்போது முற்றிலும் மாறியுள்ளதாக ஆஸ்திரேலிய அணியில் தற்போது நடைபெறும் சம்பவங்களைத் தொகுத்து வெளியிட்டு வருகின்றன ஆஸ்திரேலிய ஊடகங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com